ஜனாஸாவை அடக்கம் செய்யும் போது…
மூன்று பிடி மண் அள்ளிப் போடுதல்
அடக்கம் செய்யும் போது அதில் கலந்து கொண்டவர்கள் மூன்று பிடி மண் அள்ளி கப்ரின் மேலே போடுகின்றனர்.
இந்தக் கருத்தில் வரும் ஹதீஸ்கள் பலவீனமாக இருந்தாலும் கீழ்க்காணும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமாக அமைந்துள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவுக்குத் தொழுகை நடத்தினார்கள். பின்னர் அடக்கத்தலம் வந்து அவரது தலைமாட்டில் மூன்று கைப்பிடி மண் அள்ளிப் போட்டார்கள்.
🎙அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
📕நூல்: இப்னு மாஜா 1554📕
இவ்வாறு மண் அள்ளிப் போடும் போது ‘மின்ஹா கலக்னாகும் வபீஹா நுயீதுக்கும் வமின்ஹா நுக்ரிஜகும் தாரதன் உக்ரா’ என்று கூறுவதற்கு ஆதாரம் இல்லை.
உடலை கப்ருக்குள் வைக்கும் போது கூற வேண்டியவை☄
குழிக்குள் உடலை வைக்கும் போது பிஸ்மில்லாஹி வஅலா ஸுன்ன(த்)தி ரசூலில்லாஹ் எனக் கூறுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
🎙அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
📕நூல்: அஹ்மத் 4982, 51115📕
குழிக்குள் உடலை வைக்கும் போது ‘பிஸ்மில்லாஹி வஅலா ஸுன்ன(த்)தி ரசூலில்லாஹ்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.*
🎙அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
📕நூல்: அபூதாவூத் 2798📕
குழிக்குள் உடலை வைக்கும் போது ‘பிஸ்மில்லாஹி வஅலா மில்ல(த்)தி ரசூலில்லாஹ்‘ எனக் கூறுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
🎙அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
📕நூல்: அஹ்மத் 4581, 4748📕