❌ *பலஹீனமான செய்தி* ❌
”குர்ஆனில் முப்பது வசனங்களைக் கொண்ட அத்தியாயம் உள்ளது. அது மனிதனுக்குப் பரிந்துரை செய்யும். இதனால் அவன் பாவங்கள் மன்னிக்கப்படும். அதுதான் தபாரக்கல்லதீ பியதிஹில் முல்க் என்ற அத்தியாயமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: திர்மிதீ 2816
மேலும் இதே செய்தி அபூதாவூத் (1192), இப்னு மாஜா (3776), அஹ்மத் (7634, 7927),
ஸஹீஹ் இப்னு ஹிப்பான் (பாகம்: 3, பக்கம்: 67), ஹாகிம் (பாகம்: 1, பக்கம்: 753),
மவாரிதுல் லம்ஆன் (பாகம்: 1, பக்கம்: 438), முஸ்னத் இஸ்ஹாக் பின் ராஹவைஹி (பாகம்: 1, பக்கம்: 174), முஸ்னது அப்து இப்னு ஹுமைத்
(பாகம்: 1, பக்கம்: 421) ஆகிய நூற்களிலும் இடம் பெற்றுள்ளது.
இந்தச் செய்தி இடம் பெறும் அனைத்து நூல்களிலும் அப்பாஸ் அல்ஜுஷமீ என்ற
அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இவருடைய நம்பகத் தன்மை உறுதி செய்யப்படவில்லை.
அப்பாஸ் அல்ஜுஷமீ என்ற அறிவிப்பாளரின் நம்பகத்தன்மை பற்றி எந்த அறிஞராவது குறிப்பிட்டுள்ளாரா என்று பார்த்ததில் இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு யாரும் அவ்வாறு கூறியதாகத் தெரியவில்லை.
இப்னு ஹிப்பானைப் பின்பற்றி, இமாம் தஹபீ அவர்கள் மட்டும், ”இவர் நம்பகமானவர் என்று கூறப்பட்டுள்ளார்” என்று குறிப்பிடுகிறார்கள்.
இப்னு ஹிப்பான் அவர்கள், யாரென்று தெரியாதவர்களையும் நம்பகமானவர் என்று குறிப்பிடுவது வழக்கம். அவரது பார்வையில் நம்பகமானவர் என்றால் யாராலும் குறை கூறப்படாதவராக இருக்க வேண்டும். யாரென்றே தெரியாதவர்களை யாருமே குறை கூறி இருக்க முடியாது. இதனால் யாரென்று தெரியாதவர்களையும் இப்னு ஹிப்பான், நம்பகமானவர் பட்டியல் இடம் பெறச் செய்து விடுவார். இதை அனைத்து அறிஞர்களும் நிராகரிக்கின்றனர். வேறு எந்த அறிஞரும் அப்பாஸ் அல்ஜுஷமீ என்ற மேற்கண்ட அறிவிப்பாளரின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தவில்லை. எனவே யாரென்று அறியப்படாத அப்பாஸ் அல்ஜுஷமீ வழியாக இது அறிவிக்கப்படுவதால் இது நிரூபிக்கப் பட்ட நபிமொழி அல்ல. எனவே இதை ஏற்று அமல் செய்யக்கூடாது. மேலும் இதே செய்தியில் அதே அப்பாஸ் அல்ஜுஷமீ என்பவர் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்ததாகக் குறிப்பிடுகிறார். இதைப் பற்றி இமாம் புகாரி
அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.
அப்பாஸ் அல்ஜுஷமீ என்பவர் அடுத்த அறிவிப்பாளரான அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் செவியற்றார் என்று அறியப்படவில்லை என்று இமாம் புகாரீ அவர்கள் தனது அத்தாரீகுல் கபீர் என்ற நூல் இவரை குறை சொல்யுள்ளார்கள் என்று ஹாபிழ் இப்னுஹஜர் அவர்கள் கூறுகிறார்கள்.
(தல்கீஸுல் ஹபீர் பாகம்: 1, பக்கம்: 233)
இதே செய்தி இமாம் தப்ரானீ அவர்களுக்குரிய அல்முஃஜமுல் கபீர் என்ற நூல்
ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் வரிசையுடன் இடம் பெற்றுள்ளது என்று ஹாபிழ் இப்னு ஹஜர் தல்கீஸுல் ஹபீர் என்ற நூல் கூறியுள்ளார்கள். ஆனால் அதன் ஐந்தாவது அறிவிப்பாளர் சுலைமான் பின் தாவூத் பின் யஹ்யா அத்தபீபி அல்பஸரீ என்பவரின் நம்பகத்தன்மை பற்றி நாம் அறிந்த வரை எந்த விவரமும் எந்த நூலும் இடம் பெறவில்லை