அல்லாஹ் தம்மைக் கண்டிக்கும் வசனங்களையும் கொஞ்சமும் மறைக்காமல் திரிக்காமல் மக்கள் மன்றத்தில் முன்வைத்தார்கள்.
(முஹம்மதே!) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம்.
(திருக்குர்ஆன் 3:128)
(முஹம்மதே!) நீர் விரும்பியோரை உம்மால் நேர்வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான்.
(திருக்குர்ஆன் 28:56)
நபியே! உமக்கு அல்லாஹ் அனுமதித்ததை உமது மனைவியரின் திருப்தியை நாடி ஏன் விலக்கிக் கொள்கிறீர்?
(திருக்குர் ஆன் 66:1)
தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் (முஹம்மது) கடுகடுத்தார். அலட்சியம் செய்தார். அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்?
(திருக்குர்ஆன் 80:1-3)