மரணித்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டியவது என்ன❓

எந்தெந்த காரியங்கள் மூலம் மரணித்தவர்களுக்கு நன்மை சேர்க்க முடியும்❓

இறந்தவர்களுக்கு குர்ஆன் ஓதி சேர்த்தல், பாத்தியா ஓதுதல் ஆகியவை மார்க்கத்தில் இல்லை என்றாலும், அவர்களுக்கு செய்யவேண்டியவை என்று சிலவற்றை குர்ஆனும் ஹதீஸும் தெளிவு படுத்துகின்றன அவை என்ன❓ என்பதைப்பார்ப்போம்.
செய்ய வேண்டியவைகள்!

1 . இறந்தவர் நலனுக்காக பிரார்தனையும் பாவமன்னிப்பும்
அவர்களுக்குப் பின் வந்தோர் எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறுகின்றனர்.

(அல்குர்ஆன் 59:10)

ஒரு மனிதன் இறந்துவிட்டால் மூன்று விசயங்களை தவிர மற்ற அனைத்து அமல்களும் அவனைவிட்டு துண்டிக்கப்பட்டு விடுகின்றன அவைகள் 1 . *நிரந்தர தர்மம்* 2 . *பயன்தரும் கல்வி* 3 . *அவனுக்காக துஆ செய்யும் நல்ல குழந்தை*

என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: முஸ்லிம் (3358)

2 . தர்மம் செய்தல்

ஒரு மனிதன் நபி (ஸல்) அவர்களிடம் வந்து எனது தாய் திடீரென இறந்து விட்டார், அவர்கள் அந்நேரத்தில் பேசியிருந்தால் தர்மம் செய்யும்படி சொல்லியிருப்பார்கள் என்று நான் நினைக்கின்றேன். அவர்கள் சார்பாக நான் தர்மம் செய்தால் எனது தாய்க்கு நன்மை கிடைக்குமா? என்று கேட்டார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம்! கிடைக்கும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரீ (1388)

3 . இஸலாம் அனுமதியளிக்கும் விஷயத்தில் ஒருவன் நேர்ச்சை வைத்து அதை நிறைவேற்றாமல் இறந்து விட்டால் அதை நிறைவேற்றலாம்

ஸஃது பின் உபாதா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து என தாயார் மீது ஒரு நேர்ச்சை இருந்தது, ஆனால் அதை நிறைவேற்றாமல் இறந்து விட்டார். நான் என்ன செய்யலாம்? என்று மார்க்க தீர்ப்பு கேட்டார்கள் அதை நிறைவேற்றும்படி நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி, நூல்: புகாரீ (2761)

4 . மரணித்தவருக்கு ஹஜ் கடமையாகி அதை நிறைவேற்றாமல் இறந்து விட்டால் அவருக்காக அதை நிறைவேற்ற வேண்டும்.

ஒரு பெண்மனி நபி (ஸல்) அவர்களிடம் வந்து என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்தார். ஆனால் ஹஜ் செய்வதற்கு முன் இறந்து விட்டார் அவர்கள் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா? என்று கேட்டார்.

அதற்க்கு நபி (ஸல்) அவர்கள் ஆம்! என்று பதிலளித்தார்கள்.
மேலும் நபி (ஸல்) அவர்கள், உனது தாய்க்கு கடனிருந்தால் அதை நீ நிறைவேற்றுவாயா? என்று கேட்டார்கள், அதற்க்கு அப்பெண் ஆம் என்று சொன்னார்.

அதை கேட்ட நபி (ஸல்) அவர்கள் அப்படியாயின் அல்லாஹ்விற்க்கு கொடுத்தவாக்கை நிறைவேற்று! கொடுத்த வாக்கை நிறைவேற்ற அல்லாஹ் மிக தகுதியானவன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி,
நூல்: புகாரீ 1852

  1. நோன்பு கடமையாகி அதை நிறைவேற்ற முடியாமல் அல்லது நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து அதை நிறைவேற்றாமல் இறந்து விட்டால் அவர்சார்பாக அவரின் பொறுப்பாளர் நோன்பு நோற்க வேண்டும்.

நோன்பு கடமையான நிலையில் ஒருவர் இறந்தால் அவர் சார்பாக அவரின் பொறுப்பாளர் அந்த நோன்பை நோற்பார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரீ (1952)

6 . இறந்தவர் கடனாளியாக இருந்து அவர் எந்த சொத்து இல்லாத ஏழையாக இருந்தால் அவருடைய கடனை அவரின் உறவினர்கள் நிறைவேற்ற வேண்டும்

ஒரு பெண்மனி நபி (ஸல்) அவர்களிடம் வந்து என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்தார். ஆனால் ஹஜ் செய்வதற்கு முன் இறந்து விட்டார் அவர்கள் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா? என்று கேட்டார். அதற்க்கு நபி (ஸல்) அவர்கள் ஆம்! என்று பதிலளித்தார்கள்.

மேலும் நபி (ஸல்) அவர்கள், உனது தாய்க்கு கடனிருந்தால் அதை நீ நிறைவேற்றுவாயா? என்று கேட்டார்கள், அதற்க்கு அப்பெண் ஆம் என்று சொன்னார். அதை கேட்ட நபி (ஸல்) அவர்கள் அப்படியாயின் அல்லாஹ்விற்க்கு கொடுத்தவாக்கை நிறைவேற்று! கொடுத்த வாக்கை நிறைவேற்ற அல்லாஹ் மிக தகுதியானவன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி,
நூல்: புகாரீ1852

நாம் சொன்ன இவ்விஷயங்களைத் தவிர இறந்தவருக்கு செய்ய வேண்டடிய வேறு எந்த விஷயமும் இல்லை. இதைத்தவிர இறந்தவருக்கு செய்யப்படும் அனைத்து சடங்கு சம்பிரதாயங்கள் அல்லாஹ்வால் நிராகரிக்கப்படும்.
எனவே மறுமையை நம்பக்கூடிய முஃமின்களுக்கு இதுவே போதுமான போதனையாகும் இதை உணர்ந்து வாழ்க்கையில் அமுல்படுத்த அல்லாஹ் அருள் புரியட்டும்.

ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *