ஹதீஸ் – அறிவிப்பாளர் (ஸனத்) தொடரில் நம்பகமானவர்கள் என்று அறியப்பட்டவர்கள் தவறே செய்ய மாட்டார்களா⁉️
இமாம் அஹ்மத் பின் ஹம்பல்
————————————-
ஹதீஸ் கலை அறிஞர்கள் (அறிவிப்பாளர்களின்) வரலாறுகளைத் தொகுத்ததோடு முடித்துக் கொள்ளவில்லை.
மாறாக அறிவிப்பாளர்களில் அறியப்பட்ட நம்பகமானவர்களின் அறிவிப்புகள் உட்பட (அனைத்து) அறிவிப்பாளர்களின் அறிவிப்புகளிலும் நுட்பமாக ஆராய்ந்தார்கள்.
அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருக்கிறார்களே என்பதை மட்டும் அறிஞர்கள் சார்ந்திருக்கவில்லை. நல்ல அறிவிப்பாளர்களையும் கூட ஆய்வுக்கும் விமர்சனத்திற்கும் எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிடவில்லை.
ஏனென்றால் நம்பகமானவர் சிலவேளை தவறிழைப்பார். அல்லாஹ் மக்களை இந்த இயற்கையான அடிப்படையில் தான் படைத்திருக்கிறான்.
எனவே ஹதீஸ் கலை அறிஞர்கள், அறிவிப்பாளர்கள் எந்த அறிவிப்புகளில் தவறு செய்தார்களோ அந்த அறிவிப்புகளை ஆராய்ந்தார்கள்.
இல்மு இலலில் ஹதீஸ் (ஹதீஸில் உள்ள குறைகளைப் பற்றிய கல்வி) என்று இதற்குச் சொல்லப்படும்.
நூல்: அல்இலல், பாகம்: 1, பக்கம்: 20
இமாம் தஹபீ
——————
நம்பகமானவர் சில வேளை சில விஷயங்களில் தவறு செய்வார்.
நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 7, பக்கம்: 208
இமாம் சுயூத்தி
———————
இது ஸஹீஹான செய்தி என்று சொல்லப்பட்டால் இதன் பொருள் என்னவென்றால் (முன்பு) கூறப்பட்ட தன்மைகளுடன் இதன் தொடர் முழுமை பெற்றுள்ளது என்று தான் அர்த்தம்.
எனவே அறிவிப்பாளர் தொடரின் வெளிப்படையை வைத்து அந்த ஹதீஸை ஏற்றுக் கொள்வோம்.
நல்லவர் கூட மறந்து தவறு செய்ய வாய்ப்புள்ளதால் உண்மையில் இது உறுதி செய்யப்பட்ட விஷயம் தான் என்ற அடிப்படையில் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
நூல்: தத்ரீபுர்ராவீ, பாகம்: 1, பக்கம்: 75
ஏகத்துவம்