மூன்று சிசுக்கள் இறந்து விட்டால் தாய்க்கு சொர்க்கம் கிடைக்குமா?
தொடர்ச்சியாக மூன்று சிசுக்கள் இறந்து விட்டால் பெற்ற தாய்க்கு சொர்க்கம் என்று ஹதீஸ் உள்ளது. இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? பிறந்த சிசு இறந்தாலும் சொர்க்கமா?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் வந்து, அல்லாஹ்வின் தூதரே! உங்கள் உரைகளை (பெண்கள் கேட்க முடியாதவாறு) ஆண்களே தட்டிச் சென்று விடுகின்றனர். ஆகவே அல்லாஹ் தங்களுக்குக் கற்றுக் கொடுத்ததிலிருந்து எங்களுக்கு நீங்கள் போதித்திட எங்களுக்கென ஒரு நாளை நிர்ணயித்து விடுங்கள் என்று கூறினார்.
அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இன்ன நாளில் இன்ன இடத்தில் நீங்கள் ஒன்று கூடுங்கள் என்று சொன்னார்கள். அவ்வாறே பெண்கள் ஒன்று திரண்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்களிடம் சென்று, அல்லாஹ் தமக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து போதித்தார்கள். பிறகு, உங்களில் எந்தப் பெண் தனக்கு முன்பாக தன் குழந்தைகளில் மூன்று பேரை இழந்து விடுகின்றாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக மாறி விடுவார்கள் என்று கூறினார்கள்.
அப்போது அப்பெண்களில் ஒருவர் அல்லாஹ்வின் தூதரே! இரண்டு குழந்தைகளை இழந்து விட்டாலுமா என்று கேட்டார். இதை அப்பெண் இரண்டு முறை திரும்பத் திரும்பக் கேட்க, ஆம்! இரண்டு குழந்தைகளை இழந்து விட்டாலும் தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று முறை பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி 7310
புகாரியின் 102 வது அறிவிப்பில்
صحيح البخاري
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: «ثَلاَثَةً لَمْ يَبْلُغُوا الحِنْثَ»
பருவ வயதை அடையாத குழந்தைகளை.. என்று இடம் பெறுகின்றது.
இந்த அறிவிப்புக்கள் ஆதாரப்பூர்வமானவை தான்.
தான் மரணிப்பதற்கு முன் தனது குழந்தைகளை இழக்கும் பெண்ணுக்கு என்று தான் மேற்கண்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. எனவே இது பிறந்த சிசுக்களையும் உள்ளடக்கும்.
About Author
Sadhiq
அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.
[அல்குர்ஆன் 112:1]