ஆல்கஹால் கலந்துள்ள மவுத் வாஷ் பயன்படுத்தலாமா?
வாய் கொப்பளிக்க பயண்டுத்தப்படும் மவுத்வாஷில் சிறிதளவு ஆல்கஹால் கலந்துள்ளது. இதைப் பயன்படுத்தலாமா?
அனைத்து மவுத் வாஷ்களிலும் ஆல்கஹால் கலந்துள்ளதா என்பது தெரியவில்லை. அப்படி கலந்திருந்தால் அதன் மூலம் வாய் கொப்பளிக்கக் கூடாது.
ஆக்கஹால் போன்ற போதைப் பொருட்களை வெளி உபயோகத்துக்கு பயன்படுத்தத் தடை இல்லை.
ஆனால் உள் உபயோகத்துக்கு பயன்படுத்தக் கூடாது.
ஒரு பொருளை அதிகமாகச் சாப்பிட்டால் போதை ஏற்படும் என்றால் அதில் குறைவான அளவைச் சாப்பிடுவதும் கூடாது. குறைவான அளவைச் சாப்பிட்டால் போதை ஏற்படாது என்றாலும் அதுவும் தடை செய்யப்பட்டுள்ளது.
அதிகம் (சாப்பிட்டால்) போதை தரக்கூடிய பொருளில் குறைவானதும் தடுக்கப்பட்டது (ஹராம்) தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: அபூதாவூத் 3681
ஆல்கஹாலை உண்டால் போதை ஏற்படும் என்பதால் இதில் சிறிதளவையும் பயன்படுத்தக் கூடாது. ஆல்கஹால் கலந்த பானத்தை வாய் கொப்பளிக்கும் போது வாய்க்குள் அந்த ஆல்கஹால் சிறிதளவேனும் தங்கி இருக்கும்.
இது எச்சிலின் வழியாகவோ, நாக்கின் நரம்பு மண்டலம் வழியாகவோ, நாம் உண்ணும் உணவின் வழியாகவோ வயிற்றுக்குள் செல்ல வாய்ப்புள்ளது. எனவே உண்ணுவதற்குத் தடை செய்யப்பட்ட இது போன்ற பொருட்களைக் கொண்டு வாய் கொப்பளிப்பதும் சுவைப்பதும் கூடாது.