*உருவம் வரைந்த சட்டை அணிந்து தொழலாமா?*
*நான் ஒரு முறை பள்ளியில் உருவம் வரைந்த சட்டையை அணிந்து தொழுதேன். அதற்கு இமாம் அவர்கள் இவ்வாறு உருவம் அணிந்து தொழக் கூடாது என்றார்கள். இதனைப் பற்றி விளக்கம் தரவும்.* உருவம் அணிந்த ஆடை அணிந்து தொழலாமா? எனக்கு விளக்கம் தரவும்
ஷாஹுல்
தொழுகையில் அணியும் ஆடை நம்முடைய அல்லது மற்றவருடைய கவனத்தைத் திசை திருப்பும் வகையில் இருக்கக் கூடாது.
373 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:*நபி (ஸல்) அவர்கள் வேலைப்பாடு மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி அடை ஒன்றை அணிந்து கொண்டு தொழுதார்கள். (தொழுது கொண்டிருக்கும் போது) அதன் வேலைப்பாடுகளை ஒரு முறை கூர்ந்து கவனித்தார்கள். தொழுது முடித்ததும், எனது இந்த கறுப்புக் கம்பளி ஆடையை (இதை எனக்கு அன்பளித்த.) அபூஜஹ்மிடம் கொடுத்துவிட்டு, அபூஜஹ்மிடம் இருக்கும் (வேலைப்பாடுகளற்ற) அன்பிஜான்’ (நகர எளிய) ஆடையை என்னிடம் (வாங்கிக்) கொண்டு வாருங்கள். இந்த ஆடை சற்று முன்னர் எனது தொழுகையிலிருந்து என் கவனத்தை ஈர்த்து விட்டது என்று சொன்னார்கள்.*
ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து வரும் மற்றோர் அறிவிப்பில், *நான் தொழுது கொண்டிருக்கும் போதே அதன் வேலைப்பாடுகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டு இருந்தேன்.* அது என்னைக் குழப்பிவிடுமோ என நான் அஞ்சினேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
புஹாரி 373
*الله اعلم*