விதவை பெண்கள் சம்பந்தமாக
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
(அறியாமைக் காலத்தில்) ஒரு மனிதர் இறந்து விட்டால் அவருடைய வாரிசுகளே அவருடைய மனைவியின் மீது அதிக உரிமை உடையவர்களாக இருந்துவந்தனர். அவர்களில் சிலர் விரும்பினால் அவளைத் தாமே மணமுடித்துக் கொள்ளவும் செய்வார்கள். விரும்பினால் (வேறெவருக்காவது) அவளை மணமுடித்துக் கொடுத்து விடுவார்கள். விரும்பினால் மணமுடித்துக் கொடுக்காது அப்படியே விட்டுவிடுவார்கள்; வாழ அனுமதிக்க) மாட்டார்கள். ஆக, அவளுடைய வீட்டாரை விட (இறந்த கணவனின் வாரிசு களான) அவர்கள்தாம் அவள் மீது அதிக உரிமையுடையவர்களாக இருந்தார்கள்.
அப்போது தான் இது தொடர்பாக இறை நம்பிக்கையாளர்களே! (விதவைப்) பெண்களை நீங்கள் பலவந்தமாக அடைவது அனுமதிக்கப்பட்டதன்று. மேலும், அவர்கள் வெளிப்படையான இழிசெயல் எதையும் செய்தாலன்றி, அவர்களுக்கு நீங்கள் வழங்கிய(மஹ்ர் போன்ற)வற்றில் ஒரு பகுதியைப் பறித்துக் கொள்வதற்காக அவர்களை நீங்கள் கட்டாயப்படுத்தாதீர்கள் எனும் (4:19ஆவது) வசனம் இறங்கிற்று.
(புகாரி 4579)