தஸ்தகீர் என்ற பெயருக்கு என்ன பொருள்?
தஸ்தகீர் என்பது பார்ஸி மொழி சொல்லாகும்.
தஸ்த் என்றால் கை
கீர் என்றால் பிடிப்பவர்
என்று பொருள்.
தஸ்தகீர் என்றால் கை பிடிப்பவர் அதாவது பிறருக்கு கை கொடுத்து உதவி செய்பவர் என்று பொருளாகும். இந்தப் பொருளில் குர்ஆன், ஹதீசுக்கு மாற்றமான எந்த அம்சமும் இல்லை என்பதால் இந்தப் பெயர் வைப்பதில் எந்த தடையும் இல்லை.
முஸ்லிம்களின் பெயர் அரபி மொழியில் தான் இருக்க வேண்டும் என்பதில்லை., நபியவர்கள் தனது மகனுக்கு இப்றாஹீம் என்று பெயரிட்டிருந்தார்கள். இப்றாஹீம் என்பது அரபி மொழி அல்ல.
(பார்க்க புகாரி 1043)
அதே வேளை மக்களால் அவ்லியா எனக் கருதப்படும் அப்துல் காதிர் ஜீலானி என்பவருக்கு தஸ்தகீர் என்ற பட்டப் பெயர் உண்டு. தனது பக்தர்களைக் கைபிடித்து கரை சேர்ப்பவர் என்ற கருத்தில் இவ்வாறு பட்டம் கொடுத்துள்ளனர். இந்தக் கருத்தில் தஸ்தகீர் என்று பெயர்வைப்பது தவறாகும். அவ்வாறு இல்லாமல் பிறருக்கு உதவுபவர் என்ற சாதாரண பொருளில் இப்பெயர் வைப்பதில் தவறு இல்லை