கஅபா
முதல் மனிதர் படைக்கப்பட்டவுடன் அவர் இறைவனை வணங்குவதற்காக எழுப்பிய ஆலயம் தான் கஅபா. (திருக்குர்ஆன் 3:96)
ஆதம் (அலை) இங்கு தான் வசித்தார்கள் என்பதை இதிலிருந்து அறியலாம்.
செவ்வகமான அக்கட்டடம் ஆதமும், அவரது பிள்ளைகளும் உள்ளே சென்று தொழப் போதுமானதாகும். ஆனால் இன்று அனைவரும் உள்ளே தொழ முடியாது என்பதால் அதைச் சுற்றி அதற்கு வெளியே தொழுகிறார்கள். அதைச் சுற்றியுள்ள வளாகமும், கட்டடமும் தான் மஸ்ஜிதுல் ஹராம் – புனிதப் பள்ளி எனப்படுகிறது.
ஆதமுக்குப் பின் கஅபா சிதிலமடைந்தது. பின்னர் இப்ராஹீம் நபியவர்கள் இறைக்கட்டளைப்படி அந்தப் பாலைவனத்தைக் கண்டுபிடித்து தமது மனைவியையும், மகன் இஸ்மாயீலையும் குடியமர்த்தினார்கள்.
இறைவனின் அற்புதமாக வற்றாத ஸம்ஸம் கிணறு ஏற்படுத்தப்பட்ட பின் 30 லட்சம் மக்களுக்கு அது தினமும் பயன்படுகிறது.
அந்தத் தண்ணீர் காரணமாக அந்தப் பாலைவனம் ஊராக ஆனது. எனவே அங்கே முதல் ஆலயத்தை தந்தையும், மகனுமாக மறுபடியும் கட்டினார்கள்.