இவ்வசனத்தில் (16:8) மனிதர்கள் அன்றைக்குப் பயன்படுத்தி வந்த குதிரை, கோவேறுக் கழுதை, கழுதை ஆகிய வாகனங்களைக் குறிப்பிட்டு விட்டு, “நீங்கள் அறியாதவற்றை இனி அல்லாஹ் படைப்பான்” என்று கூறப்படுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின் எத்தனையோ விதமான வாகனங்கள் படைக்கப்படவிருப்பதை முன்கூட்டியே அறிவிப்பதாக இது அமைந்துள்ளது. திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை தான் என்பதற்கு இதையும் சான்றாகக் கொள்ளலாம்.