திருக்குர்ஆனை இறைவேதம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எடுத்து ஓதிய போது அதன் உயர்ந்த நடை அன்றைய மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. எழுதவும் படிக்கவும் தெரியாத இந்த மனிதர் இவ்வளவு உயர்ந்த தரத்தில் உள்ள இந்த நூலை இயற்றவே முடியாது என்று அவர்களுக்கு உறுதியாகத் தெரிந்தது.
இது இறைவன் புறத்திலிருந்து தான் நபிகள் நாயகத்துக்கு சொல்லப்படுகிறது என்று கூறவும் அவர்களுக்குத் தயக்கமாக இருந்தது.
இந்நூல் இவரது தகுதியை விட மேலானதாக உள்ளதால் திறமையான யாரிடமிருந்தோ இவர் கற்றுக் கொண்டு கூறுகிறார் என்றனர். அதுதான் இவ்வசனத்தில் (6:105) சுட்டிக்கட்டப்படுகிறது.