கப்ருக்கு அருகில் குர்ஆன் ஓதலாமா?
கப்ருக்கு அருகில் குர்ஆன் ஓதக்கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உங்கள் இல்லங்களை (தொழுகை, ஓதல் நடைபெறாத) சவக் குழிகளாக ஆக்கி விடாதீர்கள். “அல்பகரா’ எனும் (இரண்டாவது) அத்தியாயம் ஒதப்படும் இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடி விடுகிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் (1430)
கப்று குர்ஆன் ஓதுவதற்குரிய இடமல்ல. வீட்டில் குர்ஆன் ஓதப்பட வேண்டும். குர்ஆன் ஓதப்படாமல் இருந்தால் வீடு மண்ணறைக்கு ஒப்பாகி விடுகின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய இந்த ஒப்பீட்டிலிருந்து வீட்டில் குர்ஆன் ஓத வேண்டும் என்ற செய்தியுடன் மண்ணறையில் குர்ஆன் ஓதக்கூடாது என்பதும் தெளிவாகின்றது.