வெள்ளிக் கிழமை அன்று ஜும்ஆ முபாரக்(Blessed Friday, جمعة مباركة, JUMA MUBARAK) என்று கூறுவதற்கு நபிகளாரின் அனுமதி உள்ளதா❓
வெள்ளிக் கிழமைகளில் ஜும்ஆ முபாரக் என்ற ஒரு வாசகத்தை ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொள்கிறார்கள். பெரும்பாலானவர்கள் இந்த வார்த்தை மார்க்கத்தில் உள்ளதாக நினைத்துக் கொண்டுதான் சொல்கின்றார்கள்.
உண்மையில் வெள்ளிக்கிழமையில் ஜும்ஆ முபாரக் என்ற வாசகத்தை சொல்வதற்கு குர்ஆனிலோ, ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலோ எவ்வித ஆதாரமும் கிடையாது.
மார்க்கத்தில் எந்தவொரு செயலையாவது நாம் செய்தால் அதற்கு நபியவர்களின் வழிகாட்டுதல் இருக்க வேண்டும். அப்படியில்லாத பட்சத்தில் அது மார்க்கமாக அங்கீகரிக்கப்படாது.
இம்மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது ரத்து செய்யப்படும்.
நூல்: புகாரி 2697
ஆக மார்க்கத்தில் இல்லாத எந்தவொரு செயலை யார் செய்தாலும் அது மார்க்கமாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. ஜும்ஆ முபாரக் என்ற ஒரு வார்த்தையை வெள்ளிக்கிழமையில் சொல்வது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட بدعة பித்அத் ஆகும்
………….காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவை ஆகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.
நூல்: நஸயீ 1560
ஏகத்துவம்