யார் இந்த நபித்தோழர்?

➖➖➖➖➖➖➖➖
யார் இந்த நபித்தோழர்?
➖➖➖➖➖➖➖➖

  1. நபி (ஸல்) அவர்களால் சொர்க்கவாதி என்று சொல்லப்பட்டவர்களில் இவரும் ஒருவர்
  2. உஹதுப்போரில் வீரமரணம் அடைந்த முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களின் நிலையை நினைவு கூறிய நபித்தோழர்.
  3. அல்லாஹ்வின் தூதரின் மகன் மரணித்த போது நபியவர்களிடம் ஏன் அழுகிறீர்கள் என்று வினவிய நபித்தோழர்.
  4. உமர் (ரலி) அவர்கள் மரணிக்கும் போது அடுத்த இறைநம்பிக்கையாளர்களின் தலைவர்களில் இவருடைய பெயரையும் கூறினார்கள்
  5. உமர் (ரலி) அவர்கள் கடைசியாக செய்த ஹஜ்ஜின்போது நபிகளாரின் மனைவிகளுடன் இவரையும் அனுப்பி வைத்தார்கள்.
  6. மக்காவில் இருந்து மதீனாவிற்கு நாடு துறந்து வந்தபோது இவரையும் சஅத் பின் ரபீஉ (ரலி) அவர்களையும் நபி (ஸல்) அவர்கள் சகோதரர்களாக ஆக்கினார்கள்
  7. இந்த நபித்தோழர் சிரங்கு நோயினால் பீடிக்கப்பட்டபோது இவருக்கு பட்டாடை அணிய நபியவர்கள் அனுமதி கொடுத்தார்கள்
  8. நபியவர்களின் ஒட்டகம் திருட்டுப்போய் விட்டது என்பதை இவரின் அடிமையின் மூலம்தான் தெரியவந்தது
  9. இந்த நபித்தோழரின் கால்நடைகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள்தன்னுடைய அடிமைக்கு எச்சரிக்கை செய்தார்கள்
  10. நபி (ஸல்) அவர்களின் ஃபதக் பகுதியில் இருந்த சொத்துக்கள் தொடர்பாக பேச இவர் உமர் (ரலி) அவர்களிடம் அனுமதி வேண்டினார்கள்

➖➖➖➖➖➖➖➖➖➖➖
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி)
➖➖➖➖➖➖➖➖➖➖➖

ஆதாங்கள்..

  1. திர்மிதி 3680
  2. புகாரி 1275
  3. புகாரி 1303

4.புகாரி 1392

  1. புகாரி 1860
  2. புகாரி 2049
  3. புகாரி 2919
  4. புகாரி 3041
  5. புகாரி 3059
  6. புகாரி 3094

ஏகத்துவம்