யார் இந்த நபித்தோழர்?
1 . நபி (ஸல்) அவர்களிடம் மக்கள் நன்மைகளைப் பற்றி வினவிய போது தீமையில் இருந்து தப்பிக்கொள்ள தீமையைப் பற்றி வினவியவர்
2 . உஹதுப் போரில் இவர்களின் முன்னிலையிலேயே இவர்களின் தந்தை கொல்லப்பட்டார்கள்.
3 . உஸ்மான் (ரலி) அவர்களிடம் அல்குர்ஆனை மக்கள் பலவாறாக ஒதுகின்றனர். இதற்கு மாற்று வழி காணுவது பற்றி முறையிட்டவர்.
- நபியவர்களின் மரணத்துக்கு பிறகு நடக்க இருக்கிற சோதனைகளைப் பற்றி நன்கு அறிந்திருந்தவர்.
5 நபியவர்களின் இரகசியத்தோழர்.
- பத்ருப் போரில் இவர்கள் கலந்த கொள்ளவில்லை.
- அகழ்ப் போர் இரவில் கடுமையான காற்றும் குளிருடன் நபிகளாருடன் இருந்தவர்கள்.
8 . உமர் (ரலி) அவர்கள் இவரையும் சவாதுல் இராக் பகுதிக்கு பொறுப்பாளராக நியமித்தார்கள்.
- உக்பா (ரலி) அவர்கள் தஜ்ஜால் தொடர்பான நபிமொழியை இவர்களிடம் கேட்டுள்ளார்கள்.
- கோள் சொல்கின்றவன் சொர்க்கம் செல்லமாட்டான் என்ற நபிமொழியை அறிவித்தவர்.
ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி)
1 ஆதாரம் புகாரி (3606)
2 ஆதாரம் புகாரி (3290)
3 ஆதாரம் புகாரி (4987)
4 ஆதாரம் புகாரி (525)
5 ஆதாரம் புகாரி (6278)
6 ஆதாரம் முஸ்லிம் (3661)
7 ஆதாரம் முஸ்லிம்(3662)
8 ஆதாரம் புகாரி (3700)
9ஆதாரம் முஸ்லிம்(4562)
ஏகத்துவம்