ஏழாம் நாளில் தான் அகீகா கொடுக்க வேண்டும் என்றால் ஏழாம் நாளில் தான் பெயர் வைக்க வேண்டுமா❓
ஏழாம் நாள் கடந்தால் பெயர் வைக்கக் கூடாதா?
ஏழாம் நாள் கடந்தால் தலைமுடியை மழிக்கக் கூடாதா? என்ற சந்தேகம் எழலாம்.
இந்த மூன்று காரியங்களில் அகீகா மட்டும் தான் வணக்கம் சம்மந்தப்பட்டதாக உள்ளது. எனவே வனக்கத்தை மார்க்கம் குறிப்பிட்ட நாளில் தான் செய்ய வேண்டும்.
மற்ற இரு காரியங்களையும் ஏழாம் நாளில் செய்தால் தான் அது நபி வழியைப் பின்பற்றிய நன்மை கிடைக்கும். பெயர் சூட்டுவது அனைவருக்கும் அவசியமான ஒன்று. அந்த அவசியம் கருதி மற்ற நாட்களிலும் பெயர் வைக்கலாம். முடியைக் களைவதும் அவசியமான ஒன்று.
அதை ஏழாம் நாள் தவற விட்டால் மற்ற நாட்களில் செய்யலாம். ஆனால் ஏழாம் நாளில் செய்த சுன்னத் என்ற நன்மை கிடைக்காது.
ஏகத்துவம்