98 . * ஸூரா அல்பய்யினா (தெளிவான சான்று)*
——————————————————————
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*
 
1. *(ஏகஇறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும் இணை கற்பிப்போரும் தெளிவான சான்று தம்மிடம் வரும் வரை தவறில் நீடித்துக் கொண்டே இருந்தனர்.*
 
‎لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ مُنْفَكِّينَ حَتَّىٰ تَأْتِيَهُمُ الْبَيِّنَةُ
 
*லம்ய(K)குனில்ல(D)தீன கஃபரூ மின் அஹ்லில் (K)கி(TH)தாபி வல்முஷ்ரி(K)கீன முன்ஃப(K)க்கீன ஹ(TH)த்தா (TH)தஃதியஹுமுல் (B)பையினாஹ்*
 
*Lam yakunil-ladhina kafaru min ‘ahlil-kitabi wal-mushrikina munfakkina hattata’tiyahumul-bayyinah.*
 
*Those who disbelieved among the People of the Scripture, and the Polytheists, were not apart, until the Clear Evidence came to them.*
 
2. *இவர் அல்லாஹ்வின் தூதராவார். தூய்மையான ஏடுகளை ஓதுகிறார்.*
 
‎رَسُولٌ مِنَ اللَّهِ يَتْلُو صُحُفًا مُطَهَّرَةً
 
*ரசூலும் மினல்லாஹி ய(TH)த்லூ ஸுஹுஃபம் மு(TH)தஹ்ஹராஹ்*
 
*Rasulum-minallahi yatlu suhufam-mutahharah.*
 
*A messenger from God reciting purified scripts.*
 
3. *அதில் நேரான சட்டங்கள் உள்ளன.*
 
‎فِيهَا كُتُبٌ قَيِّمَةٌ
 
*ஃபீய்ஹா கு(TH)து(B)புன் (Q)கையிமாஹ்*
 
*Fiha kutubun qayyimah.*
 
*In them are valuable writings*.
 
4. *வேதம் கொடுக்கப்பட்டோர் தமக்குத் தெளிவான சான்று வந்த பின்பே தவிர பிளவுபடவில்லை.*
 
‎وَمَا تَفَرَّقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِنْ بَعْدِ مَا جَاءَتْهُمُ الْبَيِّنَةُ
 
*வமா (TH)தஃபர்ர(K)கல்ல(D)தீன ஊ(TH)துல் கி(TH)தாப இல்லா மிம்பஃதி மாஜாஅ(TH)த்ஹுமுல் (B)பையினாஹ்*
 
*Wa ma tafarraqal-ladhina ‘utul-kitaba illa mim ba^di ma ja’at-humul-bayyinah.*
 
*Those who were given the Scripture did not splinter, except after the Clear Evidence came to them.*
 
5. *வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலைநாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம்.*
 
وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ ۚ وَذَٰلِكَ دِينُ الْقَيِّمَةِ
 
*வமா உமிரூ இல்லா லியஃபு(D)துல்லாஹா மு(KH)ஹ்லிஸீன லஹு(D)த்தீன ஹுனஃபாஅ வயு(Q)கீமுஸ் ஸலா(TH)த்த வயுஃ(TH)துஸ் (Z)ஸகா(TH)த்த வதாலி(K)க (D)தீனுல் (Q)கையிமாஹ்*
 
*Wa ma ‘umiru illa li ya^budullaha mukhlisina lahud-Dina hunafa’a wa yuqimus-Salata wa yu’tuz-Zakah,* wa dhalika Dinul-qayyimah.*
 
*They were commanded only to worship God, devoting their faith to Him alone, and to practice regular prayer, and to give alms. That is the upright religion.*
 
6. *(ஏகஇறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும் இணை கற்பிப்போரும் நரக நெருப்பில் இருப்பார்கள். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள்.*
 
إِنَّ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ فِي نَارِ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا ۚ أُولَٰئِكَ هُمْ شَرُّ الْبَرِيَّةِ
 
*இன்னல்ல(D)தீன கஃபரூ மின் அஹ்லில் கி(TH)தாபி வல்முஷ்ரி(K)கீன ஃபீய் நாரி ஜஹன்னம (KH)ஹாலி(D)தீன ஃபீஹா உலாஇ(K)க ஹும் ஷர்ருள் (B)பரிய்யாஹ்*
 
*Innal-ladhina kafaru min ‘ahlil-kitabi wal-mushrikina fi nari Jahannama khalidina fiha, ‘ula’ika hum sharrul-bariyyah.*
 
*Those who disbelieve among the People of the Scripture, and the Polytheists, will be in the Fire of Hell, where they will abide forever. These are the worst of creatures.*
 
7. *நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரே படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள்.*
 
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَٰئِكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِ
 
*இன்னல்ல(D)தீன ஆமனூ வஅமிலுஸ் ஸாலிஹா(TH)த்தி உலாஇ(K)க ஹும் (KH)கைருல் (B)பரிய்யாஹ்*
 
*Innal-ladhina ‘amanu wa ^amilus-salihati ‘ula’ika hum khayrul-bariyyah.*
 
*As for those who believe and lead a righteous life-these are the best of creatures.*
 
8. *அவர்களது இறைவனிடம் அவர்களின் கூலி அத்ன் எனும் சொர்க்கச் சோலைகளாகும். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டனர். இது தனது இறைவனை அஞ்சுபவருக்கு உரியது*.
 
جَزَاؤُهُمْ عِنْدَ رَبِّهِمْ جَنَّاتُ عَدْنٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ۖ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ۚ ذَٰلِكَ لِمَنْ خَشِيَ رَبَّهُ
 
*ஜ(Z)ஸாவுஹும் இன்(D)த ர(B)ப்பிஹிம் ஜன்னா(TH)த்து அ(D)த்னின் (TH)தஜ்ரீ மின் (TH)தஹ்(TH)திஹல் அன்ஹாரு (KH)ஹாலி(D)தீன ஃபீஹா அ(B)ப(D)தா, ரளியல்லாஹு அன்ஹும் வரளூ அன்ஹு (D)தாலி(K)க லிமன் (KH)ஹஷிய ர(B)ப்பாஹ்.*
 
*Jaza’uhum ^inda Rabbihim jannatu ^adnin tajri min tahtihal-‘anharu khalidina fiha’abada,* radiyallahu ^anhum wa radu ^anh,* dhalika liman khashiya Rabbah.*
 
*Their reward is with their Lord: Gardens of Eternity beneath which rivers flow, where they will abide forever. God is pleased with them, and they are pleased with Him. That is for whoever fears His Lord*.
____________________________________
 
 
https://youtu.be/wNwMZbTmXSo

98 . * ஸூரா அல்பய்யினா (தெளிவான சான்று)*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *