ஜனாஸா தொழுகையில் இறந்தவருக்காக ஓதும் துஆ
அல்லாஹும்மபி[F]ர் லஹு வர்ஹம்ஹு வஆபி[F]ஹி வபு[F] அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பி(B]ல்மாயி வஸ்ஸல்ஜி வல்ப(B]ரதி வநக்கிஹி மினல் கதாயா கமா நக்கைத்தஸ் ஸவ்ப(B]ல் அப்(B]யள மினத் தனஸி வ அப்(B]தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வ அத்ஹில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபி(B]ல் கப்(B]ரி
இதன் பொருள் :
இறைவா! இவரை மன்னிப்பாயாக!
இவருக்கு அருள் புரிவாயாக!
இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக!
இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக!
இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக!
இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக!
வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக!
இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக!
இவரை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக! (முஸ்லிம்-1600)
எங்களில் உயிருடனிருப்பவர்களுக்கும், இறந்து விட்டவர்களுக்கும், இங்கு வந்திருப்போருக்கும், வராதோருக்கும், சிறியவர்களுக்கும், பெரியவர்களுக்கும், ஆணுக்கும், பெண்ணுக்கும் இறைவா! நீ மன்னிப்பாயாக!
எங்களில் எவரை நீ வாழச் செய்கிறாயோ அவரை இஸ்லாமிய அடிப்படையில் வாழச் செய்வாயாக!
எங்களில் எவரை நீ மரணிக்கச் செய்கிறாயோ அவரை ஈமானுடன் மரணிக்கச் செய்வாயாக!
யா அல்லாஹ்! இந்த மய்யித்தின் நற்செயல்களுக்குரிய கூலியை எங்களுக்குத் தடுத்துவிடாதே! இவருக்குப் பிறகு எங்களை வழி தவறச் செய்துவிடாதே!
அல்லாஹும்மக்ஃபிர் லிஹய்யினா வமய்யி(த்)தினா வஷாஹிதினா வ காயிபினா வஸகீரினா வகபீரினா வதகரினா வ உன்ஸானா அல்லாஹும்ம மன் அஹ்யய்தஹு மின்னா ஃபஅஹ்யிஹி அலல் இஸ்லாம். வமன் தவஃப்பய்தஹு மின்னா ஃபதவஃப்பஹு அலல் ஈமான். அல்லாஹும்ம லாதஹ்ரிம்னா அஜ்ரஹு வலா துழில்லனா பஃதஹு
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: இப்னுமாஜா 1487, அபூதாவூத் 2756