75. அல்-கியாமா (இறைவன் முன்னால் நிற்கும் நாள்)
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
1: لَاۤ اُقْسِمُ بِيَوْمِ الْقِيٰمَةِۙ
2: وَلَاۤ اُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِؕ
3: اَيَحْسَبُ الْاِنْسَانُ اَلَّنْ نَّجْمَعَ عِظَامَهٗؕ
4: بَلٰى قٰدِرِيْنَ عَلٰٓى اَنْ نُّسَوِّىَ بَنَانَهٗ
5: بَلْ يُرِيْدُ الْاِنْسَانُ لِيَفْجُرَ اَمَامَهٗۚ
6: يَسْأَلُ اَيَّانَ يَوْمُ الْقِيٰمَةِؕ
7: فَاِذَا بَرِقَ الْبَصَرُۙ
8: وَخَسَفَ الْقَمَرُۙ
9: وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُۙ
10: يَقُوْلُ الْاِنْسَانُ يَوْمَٮِٕذٍ اَيْنَ الْمَفَرُّ ۚ
11: كَلَّا لَا وَزَرَؕ
12: اِلٰى رَبِّكَ يَوْمَٮِٕذِ اۨلْمُسْتَقَرُّ ؕ
13: يُنَبَّؤُا الْاِنْسَانُ يَوْمَٮِٕذٍۢ بِمَا قَدَّمَ وَاَخَّرَؕ
14: بَلِ الْاِنْسَانُ عَلٰى نَفْسِهٖ بَصِيْرَةٌ ۙ
15: وَّلَوْ اَلْقٰى مَعَاذِيْرَهٗؕ
16: لَا تُحَرِّكْ بِهٖ لِسَانَكَ لِتَعْجَلَ بِهٖؕ
17: اِنَّ عَلَيْنَا جَمْعَهٗ وَقُرْاٰنَهٗۚ ۖ
18: فَاِذَا قَرَاْنٰهُ فَاتَّبِعْ قُرْاٰنَهٗۚ
19: ثُمَّ اِنَّ عَلَيْنَا بَيَانَهٗؕ
20: كَلَّا بَلْ تُحِبُّوْنَ الْعَاجِلَةَ ۙ
21: وَتَذَرُوْنَ الْاٰخِرَةَ ؕ
22: وُجُوْهٌ يَّوْمَٮِٕذٍ نَّاضِرَةٌ ۙ
23: اِلٰى رَبِّهَا نَاظِرَةٌ ۚ
24: وَوُجُوْهٌ يَّوْمَٮِٕذٍۢ بَاسِرَةٌ ۙ
25: تَظُنُّ اَنْ يُّفْعَلَ بِهَا فَاقِرَةٌ ؕ
26: كَلَّاۤ اِذَا بَلَغَتِ التَّرَاقِىَۙ
27: وَقِيْلَ مَنْ ٚ رَاقٍۙ
28: وَّظَنَّ اَنَّهُ الْفِرَاقُۙ
29: وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِۙ
30: اِلٰى رَبِّكَ يَوْمَٮِٕذِ اۨلْمَسَاقُؕ
31: فَلَا صَدَّقَ وَلَا صَلّٰىۙ
32: وَلٰڪِنْ كَذَّبَ وَتَوَلّٰىۙ
33: ثُمَّ ذَهَبَ اِلٰٓى اَهْلِهٖ يَتَمَطّٰىؕ
34: اَوْلٰى لَكَ فَاَوْلٰىۙ
35: ثُمَّ اَوْلٰى لَكَ فَاَوْلٰىؕ
36: اَيَحْسَبُ الْاِنْسَانُ اَنْ يُّتْرَكَ سُدًىؕ
37: اَلَمْ يَكُ نُطْفَةً مِّنْ مَّنِىٍّ يُّمْنٰىۙ
38: ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوّٰىۙ
39: فَجَعَلَ مِنْهُ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْاُنْثٰىؕ
40: اَلَيْسَ ذٰلِكَ بِقٰدِرٍ عَلٰٓى اَنْ يُّحْـىَِۧ الْمَوْتٰى
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
1)லா உ(q)க்ஸிமு பியவ்மில் (q)கியாமா,
2)வலா உ(q)க்ஸிமு பின்ன(f)ஃப்ஸில் லவ்வாமா,
3)அயஹ்ஸபுல் இன்ஸானு அல்லன் நஜ்மஅ இழாமா,
4)பலா (q)கா(d)திரீன அலா அன்னுஸவ்விய பனானா,
5)பல் யுரீ(d)துள் இன்ஸானு லிய(f)ஃப்ஜுர அமாமா,
6)யஸ்அலு அய்யான யவ்முல் (q)கியாமா,
7)ஃபஇ(d)தா பரி(q)கல் பஸர்,
8)வஹஸ(f)ஃபல் (q)கமர்,
9)வஜுமிஅஷ்ஷும்சு வல்(q)கமர்,
10)ய(q)கூலுல் இன்ஸானு யவ்மஇ(d)தின் அய்னல் ம(f)ஃபர்,
11)(k)கல்லா லா வ(z)ஸர்,
12)இலா ரப்பி(k)க யவ்மஇ(d)தினில் முஸ்(t)த(q)கர்,
13)யுனப்பவுல் இன்ஸானு யவ்மஇ(d)திம் பிமா (q)க(d)த்தம வஅ(kh)ஹ்ஹர்,
14)பலில் இன்ஸானு அலா ந(f)ஃப்ஸிஹி பஸீரா,
15)வலவ் அல்(q)கா மஆ(d)தீரா,
16)லா துஹர்ரி(q)க் பிஹி லிஸாந(k)க லிதஃஜல பிஹ்,
17)இன்ன அலைனா ஜம்அஹு வ(q)குர்ஆனா,
18)(f)ஃபஇ(d)தா (q)கரஃனாஹு (f)ஃப(t)த்தபிஃ (q)குர்ஆனாஹ்,
19)ஸும்ம இன்ன அலைனா பயானாஹ்,
20)(k)கல்லா பல்துஹிப்பூனல் ஆஜிலா,
21)வ(t)த(d)தரூனல் ஆ(kh)கிராஹ்,
22)உஜுஹுய் யவ்மஇ(d)தின் நாழிரா,
23)இலா ரப்பிஹா நாழிரா,
24)வ உஜுஹுய் யவ்மஇ(d)திம் பாஸிரா,
25)(t)த(d)துன்னு அய்யு(f)ஃப்அல பிஹா (f)ஃபா(q)கிரா,
26)(k)கல்லா இ(d)தா பல(gh)ஃக(t)தி(t)த் (t)தரா(q)கீ,
27)வ(q)கீல மன்ரா(q)க்,
28)வ(d)தன்ன அன்னஹுல் (f)ஃபிரா(q)க்,
29)வல்(t)த(f)ஃப்ப(t)திஸ் ஸா(q)க்கு பிஸ்ஸா(q)க்,
30)இலா ரப்பி(k)க யவ்மஇ(d)தினில் மஸா(q)க்,
31)(f)ஃபலா ஸ(d)த்த(q)க்க வலா ஸல்லா,
32)வலா(k)கின் (k)க(d)த்தப வ(t)தவல்லா,
33)ஸும்ம (d)தஹப இலா அஹ்லிஹி ய(t)தம(th)த்தா,
34)அவ்லா ல(k)க (f)ஃபஅவ்லா,
35)ஸும்ம அவ்லா ல(k)க (f)ஃபஅவ்லா,
36)அயஹ்ஸபுல் இன்ஸானு அய்யு(t)த்ர(k)க ஸு(d)தா,
37)அலம் ய(k)கு நு(t)த்(f)ஃப(t)தம் மிம்மனியிய் யும்னா,
38)ஸும்ம (k)கான அல(q)க(t)தன் (f)ஃப(kh)ஹல(q)க (f)ஃபஸவ்வா,
39)(f)ஃபஜஅல மின்ஹு(z)ஸ் (z)ஸவ்ஜய்னி(d)த் (d)த(k)கர வல்உன்ஸா,
40)அலய்ஸ (d)தாலி(k)க பி(q)கா(d)திரின் அலா அய்யுஹ்யியல் மவ்(t)தா.
பொருள் :
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…
1. கியாமத் நாள் மீது சத்தியம் செய்கிறேன்.
2. குறை கூறிக்கொண்டிருக்கும் உள்ளத்தின் மீது சத்தியம் செய்கிறேன்.
3. மனிதனின் எலும்புகளை ஒன்று திரட்ட மாட்டோம் என்று அவன் எண்ணுகிறானா?
4. அவ்வாறில்லை! அவனது விரல் நுனிகளையும் சீராக்க நாம் ஆற்றலுடையவர்கள்.
5. ஆனால் அவனுக்கு (இறைவனுக்கு) முன்னால் குற்றம் செய்யவே மனிதன் நாடுகிறான்.
6. “கியாமத் நாள் எப்போது?” எனக் கேட்கிறான்.
7, 8, 9, 10. பார்வை நிலை குத்தும்போது, சந்திரனுக்குக் கிரகணம் ஏற்படும்போது, சூரியனும், சந்திரனும் ஒன்று சேர்க்கப்படும் போது, வெருண்டோடும் இடம் எங்கே என்று அந்நாளில் மனிதன் கேட்பான்.
11. அவ்வாறில்லை! தப்பிக்கும் எந்த இடமும் இல்லை.
12. அந்நாளில் உமது இறைவனிடமே தங்குமிடம் இருக்கும்.
13. அந்நாளில் மனிதன் முற்படுத்தியது பற்றியும், பிற்படுத்தியது பற்றியும் அறிவிக்கப்படுவான்.
14, 15. மாறாக மனிதன் சமாதானங்களைக் கூறியபோதும் தன்னைப் பற்றி நன்கு தெரிந்தவனாக இருக்கிறான்.
16. (முஹம்மதே!) இதற்காக (குர்ஆனை மனனம் செய்வதற்காக) அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர்!
17. அதைத் திரட்டுவதும், ஓதச் செய்வதும் நம்மைச் சேர்ந்தது.
18. எனவே நாம் அதை ஓதும்போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக!
19. பின்னர் அதைத் தெளிவுபடுத்துவது நம்மைச் சேர்ந்தது.
20. அவ்வாறில்லை! எனினும் நீங்கள் இம்மையை விரும்புகிறீர்கள்.
21. மறுமையை விட்டுவிடுகிறீர்கள்.
22. அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும்.
23. தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்.
24. சில முகங்கள் அந்நாளில் சோகமாக இருக்கும்.
25. தமக்குப் பேராபத்து ஏற்படும் என அவை நினைக்கும்.
26, 27. அவ்வாறில்லை! உயிர், தொண்டைக் குழியை அடைந்து விடும்போது “மந்திரிப்பவன் யார்?” எனக் கூறப்படும்.
28. “அதுவே பிரிவு” என்று அவன் விளங்கிக் கொள்வான்.
29. காலோடு கால் பின்னிக் கொள்ளும்.
30. அந்நாளில் இழுத்துச் செல்லப்படுவது உமது இறைவனிடமே.
31. அவன் நம்பவுமில்லை. தொழவுமில்லை.
32. மாறாக பொய்யெனக் கருதிப் புறக்கணித்தான்.
33. பின்னர் தனது குடும்பத்தினரிடம் கர்வமாகச் சென்றான்.
34. உனக்கு நெருங்கி விட்டது! இன்னும் நெருங்கி விட்டது!
35. பின்னரும் உனக்கு நெருங்கி விட்டது! மேலும் நெருங்கி விட்டது!
36. வெறுமனே விடப்படுவான் என்று மனிதன் எண்ணுகிறானா?
37. அவன் செலுத்தப்படும் விந்தின் சிறு துளியாக இருக்கவில்லையா?
38. பின்னர் கருவுற்ற சினைமுட்டையானான். பின்னர் (இறைவன்) படைத்துச் சீராக்கினான்.
39. அவனிலிருந்து ஆண், பெண் என ஜோடியை ஏற்படுத்தினான்.
40. இத்தகையவன் இறந்தோரை உயிர்ப்பிக்க ஆற்றலுடையவன் இல்லையா?
அல்குர்ஆன் : 75 : 01-40
ஆங்கிலம் பொருள்