கேள்வி: *சொர்க்கத்திற்கு பகரமாக அல்லாஹ் முஃமின்களிடம்* எதை வாங்குகிறான்?
பதில்: நம்பிக்கை கொண்டோரிடமிருந்து அவர்களின் *உயிர்களையும், செல்வங்களையும்* (அல்குர்ஆன் 9:111)
கேள்வி : *சொர்க்கத்தில் ஒரு வில்லுக்கு சமமான இடம் கிடைப்பது?*
பதில் : *உலகத்தைவிட சிறந்தது* (ஆதாரம் : புகாரி 2793)
கேள்வி : *தொழுகை எதை கட்டளையிடுவதாக* ஷுஐப் (அலை) அவர்களின் கூட்டத்தினர் கூறினர்?
பதில் : *எங்கள் முன்னோர்கள் வணங்கியதையும், எங்கள் பொருட்களில் நாங்கள் விரும்பியவாறு செயல்படுவதையும் விட்டுவிட* கட்டளையிடுகிறதா? (அல்குர்ஆன் 11:87)
கேள்வி : *ஷுஐப் (அலை) அவர்களின் போதனைப்* பற்றி அவர்களின் கூட்டத்தினர் என்ன கருத்து கூறினர்?
பதில்: *நீர் கூறுவதில் அதிகமானவை எங்களுக்குப் புரியவில்லை. எங்களில் பலவீனராகவே* உம்மை நாங்கள் கருதுகிறோம். (அல்குர்ஆன் 11:91)
கேள்வி : *உமது குலத்தார் இல்லாவிட்டால் உம்மைக் கல்லெறிந்து கொன்றிருப்போம்* என்று கூறியதற்கு ஷுஐப் (அலை) அவர்கள் என்ன பதிலளித்தார்கள்?
பதில்: *என் சமுதாயமே! என் குலத்தவர் அல்லாஹ்வைவிட உங்களுக்கு மதிப்பு மிக்கவர்களா*? (அல்குர்ஆன் 11:92)
கேள்வி : *வானுலகில் வானவர்கள் வணங்குவதற்காக அமைக்கப்பட்ட ஆலயம்* எது?
பதில்: *பைத்துல் மஃமூர்* (ஆதாரம் : புகாரி 3207)
கேள்வி : *சொர்க்கத்தின் மிகச்சிறந்த சொர்க்கம் எது?*
பதில்: *பிர்தவ்ஸ்* (ஆதாரம் : புகாரி 2790)
கேள்வி: *யாருடைய முகங்களில் இருளும் இழிவும் ஏற்படாது?*
பதில்: *நன்மை செய்தோருக்கு* (அல்குர்ஆன் 10:26)
கேள்வி: *தீமைகளை அழிக்கக்கூடியது எது?*
*பகலின் இரு ஓரங்களிலும், இரவின் பகுதிகளிலும் தொழுகையை நிலைநாட்டுவீராக*! நன்மைகள் தீமைகளை அழித்து விடும். படிப்பினை பெறுவோருக்கு இது அறிவுரை. (அல்குர்ஆன் 11:114)
——————-
*ஏகத்துவம்*