வேண்டாம் முகஸ்துதி

தன்னைச் சிறந்த பேச்சாளர் என்று பாராட்ட வேண்டும் என்ற நோக்கம், அழைப்பாளர்களிடம் இருக்கக் கூடாத மோசமான பண்பாகும்.

இதன் தாக்கம் எந்தளவிற்கு இருக்கின்றது என்றால் ஒரு இடத்தில் தனக்கு எந்த வரவேற்பும் கிடைக்கவில்லையென்றால் இனி அப்பகுதிகளில் அவர்கள் பயான் பேசுவதை விரும்புவதில்லை. அதைத் தவிர்க்கவே பார்க்கின்றனர். அதே சமயம் தனக்கு வரவேற்பு கிடைக்கின்ற பகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதைப் பார்க்கின்றோம். இந்நிலையை மார்க்கப் பிரச்சாரம் செய்வோர் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

மக்களிடம் ஆதாயத்தையோ, பாராட்டையோ எதிர்பார்த்துச் செய்யாமல் இறைவனுக்காக, மறுமையில் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவதற்காக மட்டுமே மார்க்கத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். இம்மையில் பாராட்டப்படுவதற்காகச் செய்கின்ற செயல்கள் இம்மையோடு நின்றுவிடுகின்றன. மறுமையில் எவ்விதப் பயனையும் அவை அளிப்பதில்லை. மாறாக நரகத்தையே பரிசாக வழங்குகின்றன.

அபூஹுரைரா (ரலி) கூறியதாவது: 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் கேட்டுள்ளேன். 

மறுமை நாளில் மக்களில் முதல் முதலில் தீர்ப்பு வழங்கப்படுபவர் யாரெனில்இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவரே ஆவார். அவர் இறைவனிடம் கொண்டுவரப்படும் போதுஅவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?’’ என்று இறைவன் கேட்பான். அவர், “(இறைவா!) உனக்காக நான் அறப்போரில் ஈடுபட்டு என் உயிரையே தியாகம் செய்தேன்’’ என்று பதிலளிப்பார். இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (நீ எனக்காக உயிர்த் தியாகம் செய்யவில்லை.) மாறாக, ‘மாவீரன்’ என்று (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ போரிட்டாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)’’ என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டுஅவர் நரகத்தில் எறியப்படுவார்.

பிறகு கல்வியைத் தாமும் கற்று அதைப் பிறருக்கும் கற்பித்தவரும் குர்ஆனைக் கற்றுணர்ந்தவருமான (மார்க்க அறிஞர்) ஒருவர் (இறைவனிடம்) கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?’’ என்று இறைவன் கேட்பான். அவர், “(இறைவா!) கல்வியை நானும் கற்றுபிறருக்கும் அதை நான் கற்பித்தேன். உனக்காகவே குர்ஆனை ஓதினேன்’’ என்று பதிலளிப்பார். அதற்கு இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (எனக்காக நீ கல்வியைக் கற்கவுமில்லைகற்பிக்கவுமில்லை.) அறிஞர்’ என்று சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே நீ கல்வி கற்றாய்; ‘குர்ஆன் அறிஞர்’ என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ குர்ஆனை ஓதினாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)’’ என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டுஅவர் நரகத்தில் எறியப்படுவார்.

பிறகு இறைவன் தாராளமான வாழ்க்கை வசதிகளும் அனைத்து விதமான செல்வங்களும் வழங்கியிருந்த பெரிய செல்வந்தர் ஒருவர் இறைவனிடம் கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?’’ என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், “நீ எந்தெந்த வழிகளில் எல்லாம் பொருள் செலவழிக்கப்படுவதை விரும்புகிறாயோஅந்த வழிகளில் எதையும் விட்டுவிடாமல் அனைத்திலும் நான் உனக்காக எனது பொருளைச் செலவிட்டேன்’’ என்று பதிலளிப்பார். அதற்கு இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய் இவர் ஒரு புரவலர்’ என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ இவ்வாறு (செலவு) செய்தாய். (உன் எண்ணப்படி) அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது எண்ணம் நிறைவேறிவிட்டது)’’ என்று கூறிவிடுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டுஅவர் நரகத்தில் எறியப்படுவார். 

நூல்: முஸ்லிம் 3865

பிறர் மெச்ச வேண்டும் என்பதற்காக மார்க்கப் பிரச்சாரம் செய்தவருக்கு நன்மை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. நரகம் கூலியாகக் கிடைக்கின்றது என்பதை உணர்ந்து இந்த விஷயத்தில் நாம் கவனமாகச் செயல்பட வேண்டும்.

மேலும் பயான் பேசி முடிந்ததற்குப் பிறகு சிலர் நீங்கள் சிறப்பான முறையில் உரையாற்றியதாகக் கூறுவார்கள். அச்சமயத்தில் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறி அந்தப் பெருமையை இறைவனுக்கு உரித்தாக்கி விட வேண்டும். இதன் மூலம் நாம் பெருமை கொள்வதிலிருந்து தவிர்ந்திருக்கலாம்.

னஒவ்வொரு பேச்சாளரும் நாம் கற்றதன் அடிப்படையிலும் பிறருக்கு எடுத்துரைத்ததன் அடிப்படையிலும் நமது வாழ்நாளில் செயல் படுகிறோமா என்பதை ஒவ்வொரு நாளும் நாம் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோதமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள்.  

னஅல்குர்ஆன் 3:135

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed