வாரம் ஒரு ஸூரா! (மனனம் செய்ய)
2:285,286- ஆமனர் ரசூலு
آمَنَ الرَّسُولُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ وَالْمُؤْمِنُونَ ۚ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْ رُسُلِهِ ۚ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا ۖ غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ
ஆமனர் ரசூலு பிமா உன்(z)ஸில இலைஹி மிர்ரப்பிஹி வல்முஃமினூன், குல்லுன் ஆமன பில்லாஹி வமலாயி(k)க(t)த்திஹி வ(k)கு(t)துபிஹி வருசுலிஹ், லா நுஃபர்ரி(q)கு பைன அஹ(d)திம் மிர் ருஸுலிஹ், வ(q)காலு ஸமிஃனா வஅ(t)தஃனா (gh)ஃகுஃப்ரான(k)க ரப்பனா வஇலைக்கல் மசீர்
Amana ar-rasul bi-ma unzila ‘ilay-hi mi rabb-hi wa-al-mu’minun, kullun ‘amana bi-Allah wa-mala’ikat-hi wa-kutub-hi wa-rusul-hi Ia nufarriq bayna ‘ahad min rusul-hi wa-qalu sami’na wa-ata’na ghufran-ka rabb-na wa-‘ilay-ka al-maseer.
இத்தூதர் (முஹம்மத்) தமது இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதை நம்பினார். நம்பிக்கை கொண்டோரும் (இதை நம்பினார்கள்). அல்லாஹ்வையும், அவனது வானவர்களையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும் அனைவரும் நம்பினார்கள். “அவனது தூதர்களில் எவருக்கிடையேயும் வேற்றுமை காட்டமாட்டோம்; செவியுற்றோம்; கட்டுப்பட்டோம். எங்கள் இறைவா! உனது மன்னிப்பை (வேண்டுகிறோம்.) உன்னிடமே (எங்கள்) திரும்புதல் உண்டு” எனக் கூறுகின்றனர்.
The Messenger has believed in what was revealed to him from his Lord, as did the believers. They all have believed in God, and His angels, and His scriptures, and His messengers: “We make no distinction between any of His messengers.” And they say, “We hear and we obey. Your forgiveness, our Lord. To you is the destiny.
لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۚ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ ۗ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ ۖ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا ۚ أَنْتَ مَوْلَانَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
லா யு(k)கல்லிஃபுல்லாஹு நஃப்ஸன் இல்லா உஸ்அஹா, லஹா மா கஸப(t)த் வஅலைஹா மக்(t)தஸப(t)த், ரப்பனா லா (t)துஆஹி(d)த்னா இன்ன ஸீனா அவ் அ(kh)ஹ்(t)தஃனா, ரப்பனா வலா (t)தஹ்மில் அலைனா இஸ்ரன் (k)கமா ஹமல்(t)தஹு அலல்ல(d)தீன மின் (q)கப்லினா, ரப்பனா வலா (t)துஹம்மில்னா மாலா (th)தா(q)கத்த லனா பிஹ், வஃ-ஃபு அன்னா வ(gh)ஃக்-ஃபிர்லனா வர்ஹம்னா, அன்(t)த மவ்லானா ஃபன்சுர்னா அலல் (q)கவ்மில் (k)காஃபிரீன்.
Ia yukallifu Allahu nafsan illa wus’-ha la-ha ma kasabat wa-‘alay-ha ma iktasabat rabb-na la tu’akhidh-na ‘in naseena ‘aw akhta’naa rabb-na wa-la tahmil ‘alay-na isran kama hamalta-hu ‘ala ‘alladheena min qabli-na rabb-na wa-Ia tuhammil-na ma Ia taqah la-na bi-hi wau’ fu ‘an-na wa-ighfir la-na wa-irham-na ‘anta mawla-na fa-ansur-na ‘ala al-qawm al-kafirin.”
எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். அவர் செய்த நன்மை அவருக்குரியது. அவர் செய்த தீமையும் அவருக்குரியதே. “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ எங்களைத் தண்டித்து விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு முன்சென்றோர் மீது சிரமத்தைச் சுமத்தியது போல் எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு வலிமையில்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி. (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக! (எனவும் கூறுகின்றனர்.)
God does not burden any soul beyond its capacity. To its credit is what it earns, and against it is what it commits. “Our Lord, do not condemn us if we forget or make a mistake. Our Lord, do not burden us as You have burdened those before us. Our Lord, do not burden us with more than we have strength to bear; and pardon us, and forgive us, and have mercy on us. You are our Lord and Master, so help us against the disbelieving people