Month: June 2020

நபிகள் நாயகத்தை பற்றி முன்னறிவிப்பு

இவ்வசனங்களில் (7:157, 48:29, 61:6) தவ்ராத், இஞ்சீல் வேதங்களில் முஹம்மது நபியைப் பற்றிய முன்னறிவிப்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து விரட்டப்பட்டு மதீனாவுக்கு வருவார்கள் என்பதைத் தங்கள் நபிமார்கள் வழியாக அறிந்து வைத்திருந்த யூதர்கள் தமது அன்றைய…

குரங்குகளாக மாற்றப்பட்டது ஏன்

சனிக்கிழமை மீன்பிடிக்கக் கூடாது என்ற கட்டளையை மீறியவர்கள் குரங்குகளாக மாற்றப்பட்டனர் என்று இவ்வசனங்கள் (2:65, 5:60, 7:166) கூறுகின்றன. இன்றைய குரங்குகளுக்கும், அவர்களுக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ? என்று சிலர் நினைக்கலாம். யாரை அல்லாஹ் உருமாற்றி விட்டானோ அவர்களுக்குச் சந்ததிகளை ஏற்படுத்த…

தற்கொலை செய்ய கட்டளையிடுகிறதா❓

உங்களையே கொன்று விடுங்கள் என்று மூஸா நபியவர்கள் தமது சமுதாயத்துக்குக் கூறியதாக 2:54வசனம் கூறுகிறது. இதை நேரடிப் பொருளில் பெரும்பாலான விரிவுரையாளர்கள் விளங்கியுள்ளனர். காளைச் சிற்பத்தைக் கடவுளாக ஆக்கியதற்காக மூஸா நபியின் சமுதாயம் தம்மைத் தாமே கொன்று விட வேண்டும் என்று…

ஸாமிரி எந்த அற்புதத்தையும் செய்யவில்லை.

மூஸா நபியின் காலத்தில் வாழ்ந்த ஸாமிரி என்பவனிடம் நிகழ்ந்த அற்புதம் பற்றி இவ்வசனங்கள் (2:51, 2:54, 2:92, 2:93, 4:153, 7:148, 7:149, 7:152, 20:85-98) பேசுகின்றன. இறைவனிடமிருந்து வேதத்தைப் பெறுவதற்காக ‘தூர்‘ மலைக்கு மூஸா நபி அழைக்கப்பட்டார். தூர் மலை…

பரிந்துறை பயன் தருமா❓

மறுமையில் ஒருவருக்காக மற்றவர் பரிந்துரை செய்ய இயலுமா? என்பதில் மூன்று வகையான கருத்துக்கள் கூறப்படுகின்றன. 1. அறவே பரிந்துரை கிடையாது. 2. நல்லடியார்களும், நபிமார்களும் விரும்பியவர்களுக்குப் பரிந்துரை செய்வார்கள். 3. நிபந்தனையுடன் பரிந்துரை உண்டு. இம்மூன்று கருத்துக்களில் முதல் இரண்டு கருத்துக்களும்…

சிறப்பித்து கூறப்படும் இஸ்ரவேலர்கள்

2:47, 2:122, 45:16 ஆகிய வசனங்களில் “இஸ்ரவேலர்களை அகிலத்தாரை விடச் சிறப்பித்திருந்தேன்” என்று இறைவன் கூறுகிறான். பிறப்பின் அடிப்படையில் எவரும் எந்தச் சிறப்பும் பெற முடியாது என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகும். இதை 2:111, 3:75, 49:13ஆகிய வசனங்களில் காணலாம்.…

அனைவரும் வெளியேறுங்கள் கூறியது ஏன்❓

ஆதம் (அலை), அவரது மனைவி ஆகிய இருவர் மட்டுமே இருந்தபோது அவ்விருவரையும் தான் அல்லாஹ் வெளியேற்றினான். அவ்வாறிருக்க “அனைவரும் வெளியேறுங்கள்!” என்று இவ்வசனத்தில் (2:38) ஏன் குறிப்பிட வேண்டும்? என்று சிலர் நினைக்கலாம். உலகம் அழியும் வரை தோன்றும் அனைவரையும் அவ்விருவரும்…

ஆதம் நபியின் மன்னிப்பு பற்றிய குறிப்பு

இறைவன் புறத்திலிருந்து சில வார்த்தைகளை ஆதம் (அலை) கற்றுக் கொண்டார் என்று 2:37வசனத்தில் கூறப்படுகிறது. அந்த வார்த்தைகள் யாவை என்பது இவ்வசனத்தில் கூறப்படாவிட்டாலும் 7:23வசனத்தில் கூறப்பட்டுள்ளது. எங்கள் இறைவா எங்களுக்கே நாங்கள் அநீதியிழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து அருள் புரியாவிட்டால்…

குர்ஆன் கூறும் தடுக்கப்பட்ட மரம்

இந்த மரத்தை நெருங்காதீர்கள்” என்று திருக்குர்ஆன் 2:35, 7:19, 7:20, 7:22, 20:120 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. இது குறித்து பலரும் பல கருத்துக்களைக் கூறியுள்ளனர். ஆனால் திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் இது எந்த மரம் எனக் கூறப்படவில்லை. மரம் எதுவென்பதில் முக்கியத்துவம்…

ஆதம் நபி வசித்த சொர்க்கம் எது

2:35, 7:19, 7:22, 7:27, 20:121 ஆகிய வசனங்களில் “ஆதம் நபி, சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்’‘ என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு இருவேறு கருத்துக்கள் கொள்ளப்பட்டுள்ளன. ‘சொர்க்கம்‘ என்று தமிழ்ப்படுத்திய இடத்தில் ‘ஜன்னத்‘ என்ற சொல் இடம் பெற்றுள்ளது. மறுமையில் நல்லோர்க்கு இறைவன் வழங்கவுள்ள…

மனிதர்களுக்கு ஸஜ்தா செய்யலாமா❓

முதல் மனிதராகிய ஆதமை இறைவன் படைத்தவுடன் அவரது திறமையை வெளிப்படுத்திக் காட்டி அவருக்கு ஸஜ்தாச் செய்யுமாறு வானவர்களுக்குக் கட்டளையிட்டான் என இவ்வசனங்களில் (2:34, 7:11, 15:29-31, 17:61, 18:50, 20:116, 38:72) கூறப்பட்டுள்ளது. இவ்வசனங்களைச் சான்றாகக் கொண்டு பெரியார்களுக்கும், மகான்களுக்கும் ஸஜ்தா…

சொர்க்கத்தில் பெண்களுக்கும் துணைகள் உண்டு

“சொர்க்கத்தில் தூய்மையான துணைகள் உள்ளனர்” என்றும், பெண் துணைகள் உள்ளனர் என்றும் இவ்வசனங்களில் (2:25, 3:15, 4:57, 36:56, 37:48, 38:52, 44:54, 52:20, 55:56, 55:70, 56:22, 56:35, 78:33) கூறப்படுகின்றது. அப்படியானால் நல்லறம் செய்த பெண்களுக்கு ஆண் துணைகள்…

திருக்குர்ஆன் விடும் அறைக்கூவல்

இவ்வசனங்கள் (2:23, 10:38, 11:13, 17:88, 28:49, 52:34) திருக்குர்ஆனைப் போல் ஒரு நூலை உலகமே திரண்டாலும் உருவாக்கிட இயலாது என்று அறைகூவல் விடுகின்றன. எழுதப் படிக்கத் தெரியாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் திருக்குர்ஆன் அருளப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்)…

இவ்வசனங்களில் (2:14, 2:102, 6:112) குறிப்பிடப்படும் ஷைத்தான் என்ற சொல் கெட்ட மனிதர்களைக் குறித்து சொல்லப்பட்டதாகும். திருக்குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ ஷைத்தான் என்ற சொல் பயன்படுத்தப்பட்டால் அதை நேரடிப் பொருளில்தான் புரிந்து கொள்ள வேண்டும். நேரடிப் பொருள் கொள்வது திருக்குர்ஆனின் மற்ற வசனங்களுக்கோ,…

குர்ஆனுக்கு முன்பாக அருளப்பட்ட வேதங்களின் மீது நம்பிக்கை

இவ்வசனங்களில் (2:4, 4:60, 4:136, 4:162, 5:59, 10:94) முன்னர் அருளப்பட்டவை குறித்து கூறப்படுகின்றன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் எனும் இவ்வேதம் வழங்கப்பட்டது போல் அவர்களுக்கு முன்னர் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களுக்கும் வேதங்கள் வழங்கப்பட்டன. முன்னர் அருளப்பட்ட வேதங்களை நம்புவது…

மறைவானவைகளின் மீது நம்பிக்கை வைத்தல்

இவ்வசனத்தில் (2:3) மறைவானவற்றை நம்பவேண்டும் எனக் கூறப்படுகிறது. ஐந்து புலன்களுக்கும் எட்டாதவை யாவும் மறைவானவை என்பதில் அடங்கும். ஆயினும் இஸ்லாமிய நம்பிக்கைப்படி மறைவானவற்றை நம்புவது என்ற சொற்றொடர் குறிப்பிட்ட சில விஷயங்களை நம்புவதைக் குறிக்கும். அல்லாஹ்வையும், வானவர்களையும், சொர்க்கத்தையும், அதில் கிடைக்கும்…

மறுமை நாள், கியாமத் நாள், உலக அழிவு நாள், இறுதி நாள்

வானம், பூமி, சூரியன், விண்கோள்கள், பூமியில் வாழும் மனிதர்கள், உயிரினங்கள், தாவரங்கள் உட்பட அனைத்தும் ஒரு நாள் அழிக்கப்படும். அந்நாளில் இறைவன் மட்டுமே நிலைத்திருப்பான். யுகமுடிவு நாள், இறுதி நாள், ஸூர் ஊதப்படும் நாள் போன்ற பல்வேறு சொற்களால் இந்த நாள்…