Month: June 2020

இஸ்ரவேலருக்கு விதிக்கப்பட்ட வறுமை

இவ்வசனங்கள் 2:61, 3:112, 5:14, 5:64, 7:167 யூதர்களுக்கு வழங்கப்பட்ட தகுதிகளை அல்லது இழிவைப் பேசுகின்றன. அவர்களுக்கு வறுமை விதிக்கப்பட்டதாக 3:112 வசனம் கூறுகிறது. இன்றைக்கு யூதர்கள் செல்வச் செழிப்புடன் உள்ளதால் இவ்வசனம் கூறுவது போல் நிலைமை இல்லையே என்று சிலர்…

ஒற்றுமை எனும் கயிறு உண்டா?

இவ்வசனத்தில் (3:103) அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் பிடித்துக் கொள்ளுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. “ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்று இவ்வசனம் கூறுவதாக தமிழகத்தில் நீண்ட காலமாக மேடைகளில் இவ்வசனம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சமுதாயத்தில் எத்தகைய தீமைகள் நிலவினாலும்…

தவ்ராத்தில் யூதர்களின் கைவரிசை

இவ்வசனங்களில் (3:93, 5:15) யூதர்கள் தமது வேதத்தில் காட்டிய கைவரிசையை அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். தவ்ராத் என்பது யூதர்களின் வேதமாகும். அது ஹிப்ரு மொழியில் இருந்தது. அன்றைய யூத மக்கள் கூட அதை முழுமையாக அறிந்திருக்கவில்லை. சில யூதப் பண்டிதர்கள் மட்டுமே…

அனைத்தும் அல்லாஹ்வைப் பணிகின்றனவா?

இவ்வசனங்களில் (3:83, 13:15, 41:11) வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் இறைவனுக்கு அடிபணிகின்றன என்று பொதுவாகக் கூறாமல் விரும்பியோ, விரும்பாமலோ அடிபணிகின்றன என்று கூறப்படுகின்றது. மனிதர்களிலும், ஜின்களிலும் பெரும்பாலோர் இறைவனுக்கு அடிபணியாமல் இருக்கும்போது அனைத்தும் அடிபணிவதாக இறைவன் கூறுவது ஏன்? ‘அடிபணிதல்’…

நபிமார்களிடம் எடுத்த உறுதிமொழி

இவ்வசனத்தில் (3:81) நபிமார்களிடம் இறைவன் எடுத்த ஒரு உறுதிமொழி பற்றி கூறப்படுகிறது. 33:7 வசனத்திலும் இதுபற்றி கூறப்பட்டுள்ளது. அந்த உறுதிமொழி எது என்பதில் இரண்டு கருத்துக்கள் உள்ளன. “நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்கள் இறுதி நபியாக வருவார்கள். அவ்வாறு அவர்கள்…

முபாஹலா எனும் சத்தியப்பிரமானத்துக்கு அறைகூவல்

இவ்வசனத்தில் (3:61) இஸ்லாத்துக்கு எதிரான கொள்கை உடையவர்களுக்கு சத்தியப்பிரமாண அழைப்பு விடுக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடப்படுகிறது. ஒருவர் ஒரு கொள்கையைப் பிரச்சாரம் செய்கிறார் என்றால் அக்கொள்கையில் அவருக்கு முழுமையான நம்பிக்கை இருக்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,…

ஈஸா நபி உயிருடன் உயர்த்தப்பட்டார்களா?

இவ்வசனத்தில் (3:55) ஈஸா நபியைக் கைப்பற்றி அல்லாஹ் உயர்த்தியதாகக் கூறப்படுகிறது. கைப்பற்றி என்று நாம் மொழிபெயர்த்த இடத்தில் அரபு மூலத்தில் முதவஃப்பீக என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்குக் கைப்பற்றுதல் என்றும், மரணிக்கச் செய்தல் என்றும் பொருள் உள்ளது. அகராதியில் இவ்வாறு இரண்டு…

மஸீஹ் அரபுச் சொல்லா?

இவ்வசனங்களில் (3:45, 3:92, 4:157, 4:171,172, 5:17, 5:72, 5:75, 9:30,31) ஈஸா நபி அவர்கள் மஸீஹ் என்ற பெயரால் குறிப்பிடப்படுகிறார்கள். ஈஸா என்பது அவர்களின் இயற்பெயராக உள்ளது போல் மஸீஹ் என்பதும் அவர்களின் இயற்பெயராகும். இது அவர்களின் பண்பைக் குறிக்கும்…

குர்ஆனில் பெயர் கூறப்பட்ட வானவர்கள்

குர்ஆனில் பெயர் கூறப்பட்ட வானவர்கள் 1, ஜிப்ரில் (அலை)(அல்குர்ஆன் 2 : 98) 2, மீகாயீல் (அலை)(அல் குர்ஆன் 2 : 98) 3, மாலிக் (அலை)(அல் குர்ஆன் 43 : 77) ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வேறு சில பெயர்களைப்…

முஸ்லிமல்லாதவர்களைத் திருமணம் செய்யக் கூடாது ஏன்?

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்” என்று திருக்குர்ஆனின் 2:221, 60:10 ஆகிய வசனங்களில் கூறப்படுகிறது. இது மதவெறிப் போக்காக சிலருக்குத் தோன்றலாம். ஆழமாகச் சிந்திக்கும்போது மனிதகுல நன்மைக்காகவே இவ்வாறு சட்டம் இயற்றப்பட்டிருப்பதை அறிந்து கொள்ள…

ஈஸா நபி அல்லாஹ்வின் வார்த்தை என்பதன் பொருள்

இவ்வசனங்களில் (3:39, 3:45, 4:171) ஈஸா நபியவர்கள், அல்லாஹ்வின் வார்த்தை என்று கூறப்படுகிறது. 4:171, 15:29, 21:91, 66:12 ஆகிய வசனங்களில் ஈஸா நபி இறைவனது உயிர் எனவும் கூறப்படுகிறது. இது போன்ற வார்த்தைப் பிரயோகங்களைத் தவறாக விளங்கிக் கொண்டு ஈஸா…

பிற மதத்தவர்களை நண்பர்களாக்கக் கூடாதா?

இவ்வசனங்களில் (3:118, 3:128, 4:89, 4:139, 4:144, 5:51, 5:57, 5:80, 5:81, 9:16, 9:23, 58:14, 60:1, 60:8, 60:9, 60:13) முஸ்லிம்களைத் தவிர மற்றவர்களை முஸ்லிம்கள் உற்ற நண்பர்களாக ஆக்கக் கூடாது என்று கூறப்படுகிறது. இஸ்லாம் இனவெறியைத் தூண்டுவதாக…

ஆண்கள் தங்க நகைகள் அணியலாமா?

குர்ஆனுக்கு எதிராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்படிக் கட்டளையிட்டிருப்பார்கள் எனவும் கேட்கின்றனர். குர்ஆனுக்கு மாற்றமாக நபியவர்கள் கட்டளையிட்டிருக்க மாட்டார்கள் என்பது உண்மைதான். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆண்களுக்கு தங்க நகையைத் தடை செய்தது மேற்கண்ட வசனத்துக்கு முரணானதல்ல…

பலவீனமான நிலையில் இருந்தும் பத்ர் வெற்றி

இப்போரில் முஸ்லிம்கள் குறைவான எண்ணிக்கையிலும், போதுமான ஆயுதங்கள் இல்லாமலும் இருந்தனர். ஆனாலும் முஸ்லிம்கள் மாபெரும் வெற்றியடைந்தனர். இப்போரைப் பற்றி மிகப்பெரும் அத்தாட்சி என்று இவ்வசனம் கூறுவது ஏன்? முஸ்லிம்கள் குறைந்த எண்ணிக்கையிலும், எதிரிகள் முஸ்லிம்களைப் போல் மும்மடங்கு அதிக எண்ணிக்கையிலும் இருந்தனர்.…

இரு பொருள் தரும் வார்த்தைகள்

இவ்வசனம் (3:7) அதிகமான முஸ்லிம்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. எனவே இது பற்றி விளக்கமாக அறிந்து கொள்ளலாம். திருக்குர்ஆன் வசனங்கள் முதஷாபிஹ் எனவும் முஹ்கம் எனவும் இரு வகைகளாக உள்ளன என்று இவ்வசனம் கூறுகிறது. முஹ்கம் என்றால் என்ன? முதஷாபிஹ் என்றால்…

சாட்சியத்தில் ஆண், பெண் வேற்றுமை ஏன்?

இரண்டு பெண்களின் சாட்சியம் ஒரு ஆணுடைய சாட்சிக்குச் சமம் என்று இவ்வசனம் (2:282) கூறுகிறது. பள்ளி, கல்லூரித் தேர்வுகளில் ஆண்களை விடப் பெண்களே தொடர்ந்து அதிக மதிப்பெண்கள் பெற்று வருகின்றனர். இது பெண்களின் நினைவாற்றலுக்கும், அறிவுத் திறனுக்கும் சான்றாக உள்ளது. சாட்சியம்…

சிறிய வட்டிக்கு அனுமதி உண்டா?

இவ்வசனத்தில் (3:130) “பன்மடங்காகப் பெருகும் வட்டியை உண்ணாதீர்கள்” என்று கூறப்பட்டுள்ளது. இதைத் தவறாக விளங்கிக் கொண்டு “சிறிய அளவிலான நியாயமான வட்டிக்கு அனுமதி உண்டு; கொடிய வட்டி, மீட்டர் வட்டி போன்றவை தான் கூடாது” என்று சிலர் வாதிடுகின்றனர். இது முற்றிலும்…

பைத்தியத்திற்கு ஷைத்தான் காரணமா?

பைத்தியமாக எழுபவனை ஷைத்தானால் தீண்டப்பட்டவன் என்று இவ்வசனம் (2:275) கூறுகின்றது. மனிதர்களுக்குப் பைத்தியம் பிடிப்பதற்குக் காரணம் ஷைத்தான் தான் என்ற கருத்தைத் தருவது போல் இவ்வசனம் அமைந்துள்ளது. ஆனால் உண்மையில் ஷைத்தானுக்கு அந்த அதிகாரம் வழங்கப்படவில்லை. மனிதர்களை நேர்வழியில் இருந்து தடம்புரளச்…

மார்க்கப் பணிகளில் ஈடுபடுவோருக்கு ஊதியம்

இவ்வசனத்தில் (2:273) மார்க்கப் பணிகளில் ஈடுபடுவோருக்காக சிறப்பு கவனம் எடுக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. பொதுவாக ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்குத் தர்மம் செய்யலாம் என்பதை அனைவரும் அறிவர். ஒருவர் ஏழையாக இருப்பதுடன் மார்க்கப் பணிக்காகத் தன்னை அர்ப்பணித்துள்ளார். மார்க்கப் பணியில் தன்னை…