Month: June 2020

தோல்களில் தான் வேதனை உணரும் நரம்புகள் உள்ளன

இவ்வசனத்தில் (4:56) நரகவாசிகளின் தோல்கள் கருகும் போதெல்லாம் அவர்கள் வேதனையை உணர்வதற்காக வேறு தோல்களை மாற்றிக் கொண்டே இருப்போம் என்று கூறப்படுகிறது. வேதனைகளை உணரும் நரம்புகள் மனிதனின் தோலில் தான் உள்ளன. தோல் கரிந்து விட்டால் தீக்காயத்தை மூளை உணராது என…

முஸ்லிம்களின் வெற்றி பற்றி முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் மிகவும் சிரமத்திற்குரிய நிலையிலும், பலவீனமான நிலையிலும் இருந்தபோது இவ்வசனம் (73:20) அருளப்படுகிறது. பாதி இரவோ, மூன்றில் ஒரு பகுதி இரவோ தொழுதால் போதும் என்று அல்லாஹ் இவ்வசனத்தில் கூறுகிறான். இப்படிக் கூறும்போது “உங்களில் நோயாளிகளும்,…

தண்ணீர் கிடைக்கா விட்டால் தயம்மும்

தொழுகைக்கு முன் கை, கால், முகங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவது அவசியம் என 5:6 வசனம் கூறுகிறது. உடலுறவு கொண்டிருந்தால் அப்போது கை, கால், முகங்களைக் கழுவுவது போதாது. மாறாகக் குளிக்க வேண்டும். இவ்வாறு தூய்மை செய்வதற்குத் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டால்…

படிப்படியாக ஒழிக்கப்பட்ட போதைப் பழக்கம்

எப்போதும் குடி போதையில் இருந்த அன்றைய மக்களுக்கு, மது அருந்துதல் முதலில் தடுக்கப்படாமல் இருந்ததாக 16:67 வசனம் கூறுகிறது. பின்னர் படிப்படியாக இது குறித்த தடைகள் இறங்கின. போதையாக இருக்கும்போது தொழக்கூடாது என்ற கட்டளை ஆரம்பத்தில் பிறப்பிக்கப்பட்டதாக 4:43 வசனம் கூறுகிறது.…

விபச்சாரத்திற்கான தண்டனை

ஆண்களோ, பெண்களோ விபச்சாரத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு நூறு கசையடிகளைத் தண்டனையாக வழங்க வேண்டும் என்று இவ்வசனம் (24:2) கூறுகிறது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விபச்சாரத்திற்கான தண்டனையை இரு வகைகளாகப் பிரித்துள்ளனர். திருமணம் ஆனவர்கள் விபச்சாரம் செய்வார்களானால் அவர்களுக்கு மரண…

மணமுடிக்கத் தகாதவர்களை மணமுடித்திருந்தால்

இவ்வசனத்தில் (4:23) “இரண்டு சகோதரிகளை மணப்பது கூடாது; நடந்து முடிந்தவைகளைத் தவிர” என்று கூறப்பட்டுள்ளது. இவ்வசனத்தைச் சிலர் தவறாக விளங்கிக் கொண்டு ஏற்கனவே மனைவியின் சகோதரியையும் மணந்திருந்தால் அவர்களுடன் வாழ்க்கையைத் தொடரலாம் என்று நினைக்கின்றனர். “முன்னர் நடந்து விட்டதைத் தவிர” என்ற…

மாற்றப்பட்ட விபச்சாரத் தண்டனை

விபச்சாரம் செய்த பெண்கள் மரணிக்கும் வரை அவர்களை வீட்டுக் காவலில் வையுங்கள் எனவும், அல்லாஹ் வேறு வழியைக் காட்டும்வரை தான் இச்சட்டம் செல்லும் எனவும் இவ்வசனம் (4:15) கூறுகிறது. பின்னர் 24:2 வசனத்தில் வேறு வழியை இறைவன் காட்டினான். விபச்சாரம் செய்யும்…

விபச்சாரக் குற்றச்சாட்டுக்கு நான்கு சாட்சிகள்

விபச்சாரக் குற்றச்சாட்டுக்கு நான்கு சாட்சிகள் இவ்வசனங்களில் (4:15, 24:4, 24:13) பெண்களின் கற்புக்கு எதிராக நான்கு சாட்சிகள் இருந்தால் மட்டுமே குற்றம் சுமத்த வேண்டும் என்று சொல்லப்படுகிறது. பெண்களின் கற்புக்கும், ஒழுக்கத்துக்கும் எதிரான வதந்திகளையும், பெண்களுடன் ஆண்களைத் தொடர்புபடுத்திக் கூறும் செய்திகளையும்…

பாதிப்பு ஏற்படாத பங்கீடு

இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில் சிலருக்கு ஆறில் ஒரு பங்கு, சிலருக்கு மூன்றில் ஒரு பங்கு, சிலருக்கு நான்கில் ஒரு பங்கு, சிலருக்கு இரண்டில் ஒரு பங்கு, சிலருக்கு எட்டில் ஒரு பங்கு, சிலருக்கு மூன்றில் இரண்டு பங்கு என்ற அடிப்படையில் நிர்ணயம்…

மாற்றப்பட்ட கலாலா சட்டம்

சந்ததி இல்லாதவர் கலாலா எனப்படுவர். இத்தகையோர் சகோதர, சகோதரிகளை விட்டுச் சென்றால் சொத்துக்களை எவ்வாறு பங்கிட வேண்டும் என்று இவ்வசனம் (4:12) கூறுகிறது. இறந்தவருக்குப் பிள்ளைகள் இல்லாத நிலையில் ஒரு சகோதரனோ, ஒரு சகோதரியோ இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு…

வாரிசுரிமையில் ஆண், பெண் வேறுபாடு

வாரிசுரிமைச் சட்டத்தில் ஆண்களுக்குக் கிடைப்பதில் பாதி, பெண்களுக்குக் கிடைக்கும் என்று இவ்வசனங்கள் (4:11, 4:176) கூறுகின்றன. சொத்துரிமையில் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே பாகுபாடு காட்டுவது நியாயமில்லை என்று சிலர் விமர்சனம் செய்கின்றனர். தக்க காரணங்களுடன் தான் இஸ்லாம் சொத்துரிமையில் வேற்றுமை காட்டுகிறது…

மஹர் (மணக் கொடை)

இவ்வசனங்களில் (2:236, 2:237, 4:4, 4:24,25, 4:127, 5:5, 33:50, 60:10) திருமணம் செய்யும்போது ஆண்கள் தமது மனைவியருக்கு மஹர் எனும் மனக்கொடை வழங்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. ஒரு பெண் திருமண வாழ்வின் மூலம் தனக்கு ஏற்படும் இழப்புகளைக் கருத்தில்…

அடிமைப் பெண்களுடன் இல்லறம் நடத்த இஸ்லாம் அனுமதித்தது ஏன்?

இவ்வசனங்களில் (4:3, 4:24,25, 4:36, 16:71, 23:6, 24:31, 33:50, 33:52, 33:55, 70:30) “வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்கள்” என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அடிமைப் பெண்களைக் குறிக்கும் சொல்லாகும். “அடிமைப் பெண்களுடன் திருமணம் செய்யாமல் அவர்களின் எஜமானர்கள் குடும்பம்…

பலதார மணம் நியாயம் தானா?

இவ்வசனம் (4:3) நான்கு மனைவியர் வரை திருமணம் செய்ய ஆண்களுக்கு அனுமதி வழங்குகிறது. இது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி எனப் பரவலாகக் கருதப்படுகிறது. இதுபற்றி சரியாக ஆய்வு செய்தால் இஸ்லாம் இவ்வாறு அனுமதித்திருப்பதன் நியாயத்தை உணர முடியும். பலதார மணம், பெண்களுக்கு…

வேதத்துடன் ஏடுகளும் வழங்கப்பட்ட இறைத்தூதர்கள்

இறைத்தூதர்கள் மூன்று விஷயங்களைக் கொண்டு வந்ததாக இவ்வசனங்கள் (3:184, 16:44, 35:25) கூறுகின்றன. * தம்மை இறைத்தூதர் என நிரூபிக்கத் தேவையான தெளிவான சான்றுகள்! (அதாவது அற்புதங்கள்)* ஏடுகள்! * ஒளி வீசும் வேதம்! ஆகிய மூன்றையும் இறைத்தூதர்கள் கொண்டு வந்துள்ளனர்.…

இறைவன் அறிவித்துக் கொடுத்த மறைவானவை

இவ்வசனங்களில் (3:179, 72:26-27) மறைவான விஷயங்களை தனது தூதர்களுக்கு அல்லாஹ் அறிவித்துக் கொடுப்பான் என்று சொல்லப்படுகிறது. இவ்வசனங்களைச் சரியான முறையில் விளங்காத சிலர் இறைத்தூதர்களுக்கு மறைவான எல்லா விஷயங்களும் தெரியும் என்பதற்கு இவ்வசனங்கள் ஆதாரங்களாக உள்ளதாக வாதிடுகின்றனர். மறைவானவை அல்லாஹ்வுக்கு மட்டுமே…

இரண்டறக் கலந்த நயவஞ்சகர்கள்

இவ்வசனம் (3:179) நயவஞ்சகர்கள் விரைவில் அடையாளம் காட்டப்படுவார்கள் எனக் கூறுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் தங்களை முஸ்லிம்கள் என்று கூறி நயவஞ்சகர்கள் ஏமாற்றி வந்தனர். எனவே உண்மை முஸ்லிம்கள் யார்? போலிகள் யார்? என்பதைக் கண்டறிய முடியாமல் இரு…

சிறு கவலை தீர பெருங்கவலை

மனம் தளர்ந்து பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு ஆறுதல்படுத்துவது என்பதை இவ்வசனம் (3:153) அழகாக சொல்லித் தருகிறது. உஹதுப் போரில் முஸ்லிம்களுக்கு வெற்றி நழுவிப் போனதுடன் உயிரிழப்புகளும், காயங்களும் அதிக அளவில் ஏற்பட்டன. இதனால் முஸ்லிம்கள் மனச் சோர்வு அடைந்து தளர்ந்து போயிருந்த நேரத்தில்…

சென்று விட்ட தூதர்களில் ஈஸா நபி ஒருவரா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலக முஸ்லிம்களின் ஒரே தலைவராகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறார்கள். ஆனாலும், அவர்கள் இறைவனின் தூதரே தவிர இறைவனல்ல என்பதை இவ்வசனம் (3:144) வலியுறுத்துகின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து விட்டால் முஸ்லிம்கள் வந்த வழியே திரும்பிச்…

அதிகாரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் பங்கு இல்லை

இஸ்லாத்தின் ஏகத்துவக் கொள்கையை உரத்துச் சொல்லும் வசனங்களில் இது (3:128) முக்கியமான வசனமாகும். உஹதுப் போரின்போது இவ்வசனம் அருளப்பட்டது. இப்போரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பற்கள் உடைக்கப்பட்டு தாடையும் பிளக்கப்பட்டது. அவர்களின் முகத்திலிருந்து இரத்தம் பீறிட்டு ஓடியது. “தமது நபியின்…