Month: June 2020

ஒரு சமுதாயத்திற்கு ஒரு தூதர்

இவ்விரு வசனங்களிலும் (10:47, 16:36) ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு தூதர் அனுப்பப்படுவார் எனக் கூறப்படுகிறது. ஆயினும் சில சமுதாயத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட தூதர்கள் அனுப்பப்பட்டதாகவும் திருக்குர்ஆன் கூறுகிறது. மூஸா நபியும், ஹாரூன் நபியும் ஒரு சமுதாயத்திற்கு ஒரே நேரத்தில் அனுப்பப்பட்ட இரு…

மகான்களிடம் பரிந்துரையை வேண்டலாமா?

இவ்வசனங்கள் (10:18, 39:3) போலித்தனமான கடவுள் கொள்கைக்குப் பதிலடியாக அமைந்துள்ளன. அல்லாஹ்விடம் எங்களுக்கு நெருக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்றும், அல்லாஹ்விடம் எங்களுக்காக பரிந்து பேசுவார்கள் என்றும் வாதிட்டு அல்லாஹ் அல்லாத மற்றவர்களை சில முஸ்லிம்கள் வணங்கி வருகின்றனர். அல்லாஹ்விடம் மட்டுமே செய்ய வேண்டிய…

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூய வாழ்க்கை

இவ்வசனத்தில் (10:16) தமது தூய வாழ்க்கையை ஆதாரமாகக் காட்டி தூதுத்துவத்தை நிறுவுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடப்படுகிறது. தாம் இறைத்தூதர் என்பதற்குத் தமது கடந்த கால வாழ்க்கையை முக்கியமான சான்றாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கள் மத்தியில் முன்வைத்தார்கள்.…

அனைவரும் கல்வி கற்க வேண்டுமா?

மார்க்கத்தை அறிந்து கொள்வதற்காக சிலராவது புறப்பட்டு இருக்க வேண்டாமா என்று இவ்வசனத்தில் (9:122) கூறப்பட்டுள்ளது. மார்க்கத்தை அறிந்து கொள்வது அனைவருக்கும் அவசியம் என்றாலும் அனைத்து விஷயங்களையும் அறிந்து வைத்திருப்பது அனைவருக்கும் கடமையில்லை. அவரவர் கடைப்பிடித்து ஒழுக வேண்டிய விஷயங்களை அறிவது தான்…

தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட மூவர்

இவ்வசனத்தில் (9:118) மூன்று நபர்களை அல்லாஹ் மன்னித்ததாகச் சொல்கிறான். மிகவும் நெருக்கடியான, சிரமமான கட்டத்தில் நடைபெற்ற போர்களில் தபூக் போரும் ஒன்று. இப்போரில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தனர். ஆயினும் மூன்று நபித்தோழர்கள் போருக்குப்…

கொலைக்குரிய இழப்பீட்டின் அளவு

தவறுதலாக ஒருவன் இன்னொருவனைக் கொன்று விட்டால் அதற்கான இழப்பீடு அளிக்கப்பட வேண்டும் என்று இவ்வசனம் (4:92) கூறுகிறது. இழப்பீட்டின் அளவு திருக்குர்ஆனில் கூறப்படவில்லை. தவறுதலாக ஒருவர் இன்னொருவரைக் கொன்று விட்டால் நூறு ஒட்டகங்கள், அல்லது இரு நூறு மாடுகள், அல்லது இரண்டாயிரம்…

விரல் நுனிகளையும் சீராக்குதல்

விரல் நுனிகளையும் சீராக்குதல் மனிதனை மீண்டும் என்னால் படைக்க முடியும் என்று குறிப்பிடும் இறைவன், விரல் நுனிகளையும் என்னால் சீராக்க முடியும் என்று இவ்வசனத்தில் (75:4) கூறுகிறான். இதை விட முக்கியமான பகுதிகள் மனித உடலில் இருக்கும்போது விரல் நுனிகளை மட்டும்…

இனப்பெருக்கத்தில் பெண்களின் பங்கு

மனிதன் படைக்கப்பட்டதைக் கூறும்போது விந்துத் துளியிலிருந்து படைத்ததாகப் பல வசனங்களில் அல்லாஹ் குறிப்பிடுகிறான். ‘துளி’ என நாம் மொழி பெயர்த்திருந்தாலும், விந்துத் துளியில் உள்ள ஒரு உயிரணுவிலிருந்து மனிதனைப் படைத்ததாகவும், அது கலப்பு விந்துத் துளி எனவும் இந்த வசனத்தில் (76:2)…

நாடோடிகளுக்கும் ஸகாத்

ஸகாத் நிதியை நாடோடிகளுக்கும் செலவிடலாம் என்று இவ்வசனத்தில் (9:60) கூறப்பட்டுள்ளது. மேலும் பல வசனங்களிலும் (2:177, 2:215, 4:36, 8:41, 17:26, 30:38, 59:7) நாடோடிகளுக்கு தானதர்மங்கள் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நாடோடிகள் என்று தமிழாக்கம் செய்த இடத்தில் ‘இப்னுஸ்…

மனிதர்களின் பாவத்தால்) வானங்கள் அவற்றின் மேற்புறத்திலிருந்து பிளந்து விட முயலும்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— *(மனிதர்களின் பாவத்தால்) வானங்கள் அவற்றின் மேற்புறத்திலிருந்து பிளந்து விட முயலும். வானவர்கள் தமது இறைவனைப் போற்றிப் புகழ்ந்து, பூமியில் உள்ளவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவார்கள். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வே மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.*…

ஆம்வே போன்ற மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் ஈடுபடுவது கூடுமா❓

ஆம்வே போன்ற மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் ஈடுபடுவது கூடுமா❓ சங்கிலித் தொடராக இருப்பின் கூடாது எம்.எல்.எம். (மல்டி லெவல் மார்க்கெட்டிங்) என்று அழைக்கப்படும் சங்கிலித் தொடர் வியாபாரத்தில் பல வகைகள் உள்ளன. அந்த அனைத்து வகைகளுமே ஏமாற்றுதல், மோசடி, பிறர் பொருளை…

அல்லாஹ்வின் பாதையில் ஸகாத்

ஸகாத் நிதியை எட்டு வழிகளில் செலவிட வேண்டும். அதில் ஒரு வகை அல்லாஹ்வின் பாதையில் என்று இவ்வசனத்தில் (9:60) சொல்லப்படுகிறது. அல்லாஹ்வின் பாதையில் என்ற சொல் எல்லா நல்ல பணிகளையும் குறிக்கும் சொல் என்றாலும் சில சந்தர்ப்பங்களில் சத்தியத்திற்காகக் களத்தில் இறங்கிப்…

உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்கு ஸகாத்

ஸகாத் நிதியைப் பெறத் தகுதியானவர்களில் முஸ்லிமல்லாதவர்களும் ஒரு பிரிவினராவர். முஸ்லிம் அல்லாதவர்களில் யார் இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்கள் மீதும் பகைமை பாராட்டாமல் இருக்கிறார்களோ அத்தகையோருக்கும் ஸகாத் நிதியைச் செலவிடலாம் என்று இவ்வசனம் (9:60) கூறுகிறது. உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காக என்பது இத்தகையோரையே குறிக்கிறது.…

படைபலம் குறைவாக இருந்தால் போர் கடமையா?

எண்ணிக்கையும், படைபலமும் குறைவாக இருந்தாலும் போரிடுவது கடமை என்று இவ்வசனம் (9:41) கூறுகிறது. 8:66 வசனம் எதிரிகளின் பலத்தில் பாதியளவு இருந்தால் தான் போர் கடமை எனவும், அதை விடக் குறைவாக இருந்தால் போர் கடமையில்லை எனவும் கூறுகிறது. இவ்விரண்டும் முரண்…

விடிவெள்ளியா? சப்தமிடும் நட்சத்திரங்களா?

இவ்வசனத்தில் தாரிக் மீது சத்தியமாக என்று சொல்லப்பட்டுள்ளது. தாரிக் என்பது என்ன என்றும் அடுத்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது தாரிக் என்பது ஒளி வீசும் ஒரு நட்சத்திரத்தின் பெயர் என்பது இதிலிருந்து தெரிகின்றது. நட்சத்திரங்களில் அதிகாலையில் அதிகப் பிரகாசத்துடன் காட்சி தரும்…

பிற மதத்தினருக்கு ஜிஸ்யா வரி ஏன்?

இவ்வசனத்தில் (9:29) முஸ்லிம் அல்லாதவரிடம் ஜிஸ்யா வரி வசூலிக்குமாறு கூறப்படுகிறது. இது பிற மதத்தவர் மீது செய்யும் அக்கிரமம் போல் கருதப்படுகிறது. இது பற்றி உண்மை நிலையை அறிந்து கொண்டால் ஜிஸ்யா வரியை யாரும் குறை கூற மாட்டார்கள். இஸ்லாமிய ஆட்சியில்…

பிற மதத்தவர் கஅபாவுக்கு வரத் தடை ஏன்?

கஅபா ஆலயத்துக்கு முஸ்லிமல்லாதவர்கள் வரலாகாது என்று இவ்வசனத்தில் (9:28) கூறப்பட்டுள்ளது. இஸ்லாமிய வணக்கத் தலங்களான பள்ளிவாசல்களுக்கு மற்றவர்கள் தூய்மையாக வருவதை இஸ்லாம் தடுக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பள்ளிவாசலே அவர்களின் தலைமைச் செயலகமாக இருந்தது. போர்க்களங்களில் கைதிகளாகப் பிடிக்கப்படுவோர்…

எதிரிகளை முழுமையாக முறியடித்தல்

போர் நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டால் தோற்றவர்களைக் கைது செய்து பின்னர் விடுதலை செய்தல் கூடாது. அவ்வாறு செய்தால் அவர்கள் மீண்டும் படை திரட்டிக் கொண்டு அடுத்த போருக்கு வருவார்கள். அதே சமயம் எதிரிகள் அடியோடு முறியடிக்கப்பட்டு அவர்கள் எதிர்த்துப் போரிடவே அஞ்சும்…

பலவீனமான அரசுகள் மீது போர் கடமையில்லை

முஸ்லிம் நாடுகள் தக்க காரணத்துடன் போரிடுவதை இஸ்லாம் அனுமதிப்பது மட்டுமின்றி அதைக் கடமையாகவும் ஆக்கியுள்ளது. இந்தக் கடமைக்கு படைபலம் முக்கியமான நிபந்தனையாக ஆக்கப்பட்டுள்ளது. போதிய பலமின்றி களத்தில் இறங்குவது தற்கொலைக்குச் சமமானது. ஆரம்பத்தில் எதிரிகளின் பலத்தில் பத்தில் ஒரு பங்கு இருந்தால்…

ராணுவ பலத்தைப் பெருக்குவது அரசின் கடமை

படைபலத்தைப் பெருக்கிக் கொள்ளுமாறு இவ்வசனம் (8:60) கூறுகிறது. படை திரட்டுதல் என்பது முஸ்லிம்கள் தமது நாடுகளில் செய்ய வேண்டிய கடமையாகும். ஒரு நாட்டில் சிறுபான்மையாக வாழ்பவர்கள் இவ்வாறு படை திரட்டலாம் என்று இவ்வசனத்தை புரிந்து கொள்ளக் கூடாது. மக்காவில் இருந்தபோதும், அபிஸீனியாவில்…