Month: June 2020

துல்கர்னைன் நபியா?

துல்கர்னைன் நபியா? இவ்வசனத்தில் (18:98) துல்கர்னைன் என்ற மன்னரைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. இவர் இறைத்தூதரா? இறைத்தூதராக இல்லாத நல்ல மனிதரா என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. யஃஜூஜ், மஃஜூஜ் எனும் கூட்டத்தினருக்கும், மக்களுக்கும் மத்தியில் தடுப்பை ஏற்படுத்திய துல்கர்னைன், இத்தடுப்பு…

பெயர் சூட்டச் சடங்குகள் இல்லை

பெயர் சூட்டச் சடங்குகள் இல்லை இவ்வசனத்தில் (3:36) மர்யம் அவர்களுக்கு அவர்களின் தாயார் பெயர் சூட்டியதாகக் கூறப்படுகிறது. மர்யம் (அலை) அர்களின் தாயார் தமது குழந்தையை இறைப்பணிக்காக அர்ப்பணம் செய்ய நேர்ச்சை செய்தபோது ஆண் குழந்தை பிறக்கும் என்ற எண்ணத்தில் நேர்ச்சை…

மறைவான விஷயம் நூஹ் நபிக்குத் தெரிந்ததா?

மறைவான விஷயம் நூஹ் நபிக்குத் தெரிந்ததா? இவ்வசனத்தில் (71:27) “இவர்களை விட்டு வைத்தால் மக்களை வழிகெடுப்பார்கள்; பாவியைத்தான் பெற்றெடுப்பார்கள்” என்று நூஹ் நபி கூறியதாகக் கூறப்பட்டுள்ளது. ஒருவர் கூட நல்லவராக மாற மாட்டார்கள் என்றும் அவர்கள் பெற்றெடுக்கும் சந்ததிகளும் பாவிகளாக இருப்பார்கள்…

நரகின் எரிபொருட்கள்

நரகின் எரிபொருட்கள் அல்லாஹ்வையன்றி யாரை, அல்லது எதை வணங்கினார்களோ அவர்கள் நரகின் எரிபொருட்களாவர் என்று இவ்வசனத்தில் (21:98) கூறப்பட்டுள்ளது. அல்லாஹ்வைத் தவிர எதை வணங்கினாலும் எவரை வணங்கினாலும் அவர்களும் நரகில் போடப்படுவார்கள் என்று இவ்வசனம் கூறுகிறது. வணங்கியவர்கள் நரகில் போடப்படுவதை நாம்…

களாத் தொழுகை

களாத் தொழுகை இவ்வசனத்தில் (19:60) தொழுகையை விட்டவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் பற்றிக் கூறப்படுகிறது. பல வருடங்களாக, பல மாதங்களாக தொழுகையை விட்டவர்கள் திடீரென்று திருந்தி வாழ விரும்புவார்கள். இவர்கள் விட்டுவிட்ட பல வருடங்களின் தொழுகையை நிறைவேற்ற வேண்டுமா? அல்லது இவர்கள்…

அச்சம் தீர வழி

அச்சம் தீர வழி இவ்வசனங்களில் (28:31,32) கைத்தடியைப் பாம்பாக மாற்றுதல், கையில் இருந்து வெளிச்சம் வருதல், பயத்தின்போது இரு கைகளையும் ஒடுக்கி பயத்திலிருந்து விடுபடுதல் ஆகிய அற்புதங்கள் மூஸா நபிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து “இவ்விரண்டும் அற்புதங்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.…

மலட்டுக் காற்று

மலட்டுக் காற்று இவ்வசனத்தில் (51:41,42) மலட்டுக் காற்றின் மூலம் ஒரு சமுதாயத்தை அழித்ததாகக் கூறப்பட்டுள்ளது. காற்றில் எப்படி மலட்டுத் தன்மை இருக்கும் என்று நாம் நினைக்கலாம். காற்று மனிதனுக்குப் பயன்பட வேண்டுமானால் அதில் ஆக்ஸிஜன் போன்றவை இருந்தாக வேண்டும். காற்றில் உள்ள…

கருவுற்ற சினை முட்டை

கருவுற்ற சினை முட்டை இவ்வசனங்களில் (22:5, 23:14, 40:67, 75:38, 96:2) மனிதனின் துவக்க நிலையைச் சொல்லும்போது அலக், அலக்கத் என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இச்சொல்லுக்குப் பல அர்த்தங்கள் உள்ளன. இரத்தக் கட்டி, தொங்கிக் கொண்டிருக்கும் நிலை, ஒன்றுடன் ஒன்று கோர்த்துக்…

களங்கம் சுமத்தியவர்களுக்கும் கருணை

களங்கம் சுமத்தியவர்களுக்கும் கருணை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பெரிதும் பாதித்த நிகழ்ச்சி அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி)யின் மீது சுமத்தப்பட்ட களங்கமாகும். இவ்வாறு அவதூறு கூறியவர்களில் மிஸ்தஹ் என்பார் முக்கியப் பங்கு வகித்தார். அவருக்கு ஆயிஷா (ரலி) அவர்களின் தந்தை…

பெண்களைத் தொட்டால் உளூ நீங்குமா?

பெண்களைத் தொட்டால் உளூ நீங்குமா? இவ்வசனத்தில் (5:6) “பெண்களைத் தீண்டி, தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. பெண்களைத் தீண்டுதல் என்ற சொல் தொடுதல் எனவும், தாம்பத்தியம் எனவும் இரு பொருள் தரும் சொல்லாகும். எனவே இந்த இடத்தில்…

மிஃராஜ் பற்றி குர்ஆன்

மிஃராஜ் பற்றி குர்ஆன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு இரவில் வின்னுலகம் சென்று திரும்பினார்கள். இது மிஃராஜ் பயணம் என்று சொல்லப்படுகிறது. இது குறித்து ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் 17:1 வசனத்தில் மக்காவில் இருந்து ஜெருசலம் வரை நபிகள்…

நாளின் துவக்கம் எது?

நாளின் துவக்கம் எது? இவ்வசனத்தில் (2:239) கூறப்படும் நடுத்தொழுகை என்பது அஸர் தொழுகைதான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள். இதைக் கொண்டு நாளின் துவக்கம் பகல்தான் என்று சிலர் புதிதாக வாதிடத் துவங்கியுள்ளனர். இரவில் இருந்துதான் நாள்…

கர்ப்பிணிப் பெண்களின் இத்தா

கர்ப்பிணிப் பெண்களின் இத்தா கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதம் பத்து நாட்கள் மறுமணம் செய்யாமல் காத்திருக்க வேண்டும் என்று 2:234 வசனத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்கான விளக்கத்தை 69வது குறிப்பில் காண்க! கணவன் மரணிக்கும்போது மனைவி கர்ப்பிணியாக இருந்தால் அவள் கடைப்பிடிக்க…

யார் மீது போர் கடமை?

யார் மீது போர் கடமை? இஸ்லாத்திற்கு எதிராகச் செய்யப்படும் விமர்சனங்களில் தீவிரவாதம் குறித்த விமர்சனம் முக்கிய இடத்தை வகிக்கிறது. எதிரிகளுடன் போர் செய்யுங்கள் என்று கட்டளையிடும் வசனங்களை எடுத்துக் காட்டி முஸ்லிமல்லாத மக்களைக் கொன்று குவிக்க இஸ்லாம் கட்டளை இடுகிறது என்று…

பத்ருப் போர் வெற்றி குறித்த முன்னறிவிப்பு

பத்ருப் போர் வெற்றி குறித்த முன்னறிவிப்பு இவ்வசனம் (8:7) கூறுவது என்ன என்பதை முதலில் அறிந்து கொள்வோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் ஆட்சியை நிறுவியபின் மக்காவைச் சேர்ந்த வணிகக் கூட்டத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட…

அபூலஹபின் அழிவு 

அபூலஹபின் அழிவு இந்த (111வது) அத்தியாயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தந்தையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முக்கிய எதிரியுமான அபூலஹபின் அழிவைப் பற்றி பேசுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்தபோது நபிகள்…

அணுகுண்டு பற்றிய முன்னறிவிப்பு

அணுகுண்டு பற்றிய முன்னறிவிப்பு இந்த 105 வது அத்தியாயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்னர் மக்காவில் நடந்த ஓர் அதிசய நிகழ்வைக் கூறுகிறது. இறைவனை வணங்குவதற்காக உலகில் முதன் முதலில் எழுப்பப்பட்ட ஆலயம் கஅபா ஆகும். இந்த ஆலயத்தில்…

குர்ஆன் 19 என்ற கணிதக் கட்டமைப்பில் உள்ளதா?

குர்ஆன் 19 என்ற கணிதக் கட்டமைப்பில் உள்ளதா? இவ்வசனத்தில் (74:30) “அதன் மீது 19 பேர் உள்ளனர்” என்று கூறப்படுவது நரகத்தின் காவலர்களின் எண்ணிக்கையைக் கூறுகிறது. இதில் அனைத்து அறிஞர்களும் ஒருமித்த கருத்தில் உள்ளனர். இதில் குழப்பமோ, சந்தேகமோ இல்லை. ஆனால்…

பெரு வெடிப்புக்குப் பின் புகை மூட்டம்

பெரு வெடிப்புக்குப் பின் புகை மூட்டம் இவ்வசனத்தில் (41:11) வானம் புகையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இது 21:30 வசனத்தில் கூறப்படும் நிகழ்வைத் தொடர்ந்து ஏற்பட்டதாகும். அதாவது, இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஒரு சிறு பொருளுக்குள் அடக்கப்பட்டிருந்தது. திடீரென அது வெடித்துச் சிதறியதால்…