Month: June 2020

அரபு எழுத்துக்களில் ஏற்பட்ட மாற்றங்கள்

அரபு எழுத்துக்களில் ஏற்பட்ட மாற்றங்கள் அடுத்து குர்ஆனைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் அரபு எழுத்துக்களில் ஏற்பட்ட மாறுதல்களாகும். திருக்குர்ஆன் அருளப்பட்டு 14 நூற்றாண்டுகள் கடந்து விட்டன. 14 நூற்றாண்டுகள் கடக்கும்போது எந்த ஒரு மொழியும் அதனுடைய…

ஏழு கிராஅத்கள்

ஏழு கிராஅத்கள் ஏழு கிராஅத் அல்லது பத்து கிராஅத் என்ற பெயரில் பலரும் திருக்குர்ஆனுடன் விளையாடி உள்ளனர். அல்லாஹ் திருக்குர்ஆனை நானே நேரடியாகப் பாதுகாப்பேன் என்று உத்தரவாதம் தருகிறான். (பார்க்க 15:9) அல்லாஹ்வின் வேதத்தில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்ய…

குர்ஆனில் உள்ள வசனங்களின் எண்கள்

வசனங்களின் எண்கள் குர்ஆனில் எத்தனை வசனங்கள் இருக்கின்றன என்பது குறித்து அறிஞர்கள் பலவிதமான எண்ணிக்கையைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அலீ (ரலி) அவர்கள் 6218 வசனங்கள் என்கிறார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் 6616 வசனங்கள் என்கிறார்கள். ஹுமைத் என்பார் 6212 வசனங்கள் என்கிறார்கள்.…

மக்கீ மதனீ

மக்கீ மதனீ திருக்குர்ஆனின் சில வசனங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கையின்போது அருளப்பட்டன. அவை ‘மக்கீ’ எனப்படும். சில வசனங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மதீனா வாழ்க்கையின்போது அருளப்பட்டன. அவை ‘மதனீ’ எனப்படும். உஸ்மான் (ரலி) அவர்கள்…

அவசியமற்ற ஆய்வுகள்

அவசியமற்ற ஆய்வுகள் ‘கஹ்ஃபு’ (குகை) என்ற 18வது அத்தியாயத்தின் 19வது வசனத்தில் ‘வல்யத்தலத்தஃப்’ என்ற ஒரே ஒரு சொல்லை மட்டும் பெரிய எழுத்தாக எழுதியிருப்பார்கள். திருக்குர்ஆனின் எழுத்துக்களை எண்ணி, அதில் சரிபாதி இடமாக இந்தச் சொல் இடம் பெற்றுள்ளது என ஓரத்தில்…

குர்ஆனில் நிறுத்தல் குறிகள்

நிறுத்தல் குறிகள் திருக்குர்ஆனில் ஒவ்வொரு வசனத்தின் இறுதியிலும், வசனங்களுக்கு இடையேயும் சில அடையாளங்களையும் சேர்த்து தற்போது அச்சிட்டு வருகின்றனர். இத்தகைய அடையாளங்கள் எதுவும் இன்றளவும் பாதுகாக்கப்படுகின்ற மூலப் பிரதியில் இல்லை. இந்த இடங்களில் நிறுத்துவது அவசியம் இந்த இடங்களில் நிறுத்துவது சிறந்தது…

குர்ஆனில் உள்ள ஸஜ்தாவின் அடையாளங்கள்

ஸஜ்தாவின் அடையாளங்கள் ஸஜ்தாவைப் பற்றிக் கூறுகின்ற வசனங்கள் மிக அதிக அளவில் இருந்தும் 14 வசனங்களின் ஓரங்களில் ஸஜ்தா என்று அச்சிட்டுள்ளனர். எந்தெந்த வசனங்களை ஓதும்போது ஸஜ்தா செய்ய வேண்டும் என்பது பற்றி இங்கே நாம் விவாதிக்கவில்லை. (ஸஜ்தா வசனங்கள் எவை…

மன்ஜில்

மன்ஜில்கள் முப்பது பாகங்களாகப் பிரிக்கப்பட்டது போல் ஏழு மன்ஜில்களாகவும் குர்ஆனைச் சிலர் பிரித்துள்ளனர். இது திருக்குர்ஆனின் ஓரங்களில் இன்றளவும் அச்சிடப்பட்டு வருகிறது. வாரத்திற்கு ஒரு முறை குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்க வேண்டும் என்பதற்காக சமஅளவிலான ஏழு பாகங்களாகக் குர்ஆனைப் பிரித்தனர்.…

30 ஜுஸூவுக்கள்

முப்பது பாகங்கள் அடுத்தது திருக்குர்ஆன் முப்பது ஜுஸ்வு எனும் பாகங்களாகப் பிரிக்கப்பட்டு இருப்பதை நாம் அறிவோம். இது பிற்காலத்தில் வந்தவர்களால் வசதிக்காகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு பிரிக்குமாறு அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறவில்லை. உஸ்மான் (ரலி) அவர்களின் மூலப் பிரதியிலும் 30 பாகங்கள்…

அத்தியாயங்களுக்கு பெயர் சூட்டுதல்

அத்தியாயங்களின் பெயர்கள் திருக்குர்ஆனில் உள்ள 114 அத்தியாயங்களும் தனித்தனி பெயர்களுடன் அச்சிடப்பட்டு வருகின்றன. இந்தப் பெயர்களில் பெரும்பாலானவற்றை அல்லாஹ்வோ, அவனது தூதரோ, அபூபக்ர் (ரலி) அவர்களோ, உஸ்மான் (ரலி) அவர்களோ சூட்டவில்லை. உஸ்மான் (ரலி) அவர்கள் தொகுத்த மூலப் பிரதியில் எந்தவொரு…

ஒருமித்த கருத்தில் இருந்து அங்கீகரித்தல்

சமுதாயத்தின் அங்கீகாரம் உஸ்மான் (ரலி) அவர்களுடைய இந்த ஏற்பாட்டை அன்றைய சமுதாயத்தில் இருந்த நபித்தோழர்களிலும், நல்லோர்களிலும் யாருமே ஆட்சேபிக்கவில்லை. இது தேவையான, சரியான ஏற்பாடு தான் என்பதை ஒப்புக் கொண்டார்கள். அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) மட்டும் தம்முடைய பழைய பிரதியை…

குர்ஆனில் அத்தியாயங்கள் வரிசைப்படுத்திய விதம்..

அத்தியாயங்களை வரிசைப்படுத்துதல் ஹப்ஸா (ரலி) அவர்களிடம் இருந்த அந்த ஒரே மூலப் பிரதியைப் பெற்று அதைப்போல் பல பிரதிகள் தயாரிக்கும் பணியை உஸ்மான் (ரலி) அவர்கள் செய்யலானார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் தயாரித்த மூலப் பிரதியில் ஒவ்வொரு அத்தியாயமும் முழுமைப்படுத்தப்பட்டு இருந்தாலும்,…

எழுத்து வடிவில் குர்ஆன்

எழுத்து வடிவிலும்… கல்வியாளர் உள்ளங்களில் குர்ஆனைப் பாதுகாக்க ஏற்பாடு செய்ததுடன் நின்று விடாமல் அந்தச் சமுதாயத்தில் எழுதத் தெரிந்திருந்தவர்களை அழைத்து தமக்கு அவ்வப்போது வருகின்ற இறைச் செய்தியை உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிவு செய்வார்கள். இவ்வாறு பதிவு செய்வதற்காக…

நபித்தோழர்களின் உள்ளத்திலும் குர்ஆன்

நபித்தோழர்களின் உள்ளங்களில்… நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதலில் எந்தச் சமுதாயத்தைச் சந்தித்தார்களோ அந்தச் சமுதாயம் எழுத்தறிவில்லாத சமுதாயமாகவும், அதே நேரத்தில் மிகுந்த நினைவாற்றலுடைய சமுதாயமாகவும் இருந்தது. பொதுவாக எழுத்தாற்றல் இல்லாதவர்களுக்கு அதிக அளவிலான நினைவாற்றல் இருப்பதை இன்றைக்கும் கூட நாம்…

குர்ஆன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில்… நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அவ்வப்போது திருக்குர்ஆன் அருளப்பட்டவுடன் அதை அவர்கள் தமது உள்ளத்தில் பதிவு செய்து கொள்வார்கள். இவ்வாறு பதிவு செய்து கொள்வதற்கு அவர்கள் ஆரம்பக் கட்டத்தில் மிகுந்த சிரத்தை எடுக்கலானார்கள். அது…

23 ஆண்டுகளில் சிறிது சிறிதாக

திருக்குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுயமாகத் தயாரிக்கவில்லை; இறைவன் தான் வழங்கினான் என்றால் எந்த வகையில் அவர்களுக்கு வழங்கினான் என்ற கேள்விக்கான விடையையும் அறிந்து கொள்வது அவசியம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் ஏராளமான இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டனர். முதல்…

வெள்ளிக்கிழமை மட்டும் தனித்து நோன்பு நோற்கலாகாது

வெள்ளிக்கிழமை மட்டும் தனித்து நோன்பு நோற்கலாகாது நாட்களில் வெள்ளிக்கிழமை மிகச் சிறந்தது என்றாலும் அன்றைய தினம் நோன்பு நோற்கக் கூடாது. வெள்ளிக்கிழமை நோன்பு நோற்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்களா? என்று ஜாபிர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள்,…

எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்; எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…——————————————அவர்கள் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். வானங்களும் பூமியும் படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்; எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!…

குர்ஆனை இறைவேதம் என்பதை நிரூபிக்கும் அறிவியல் சான்றுகள்

அறிவியல் சான்றுகள் 1400 ஆண்டுகளுக்கு முன்னால் எந்த மனிதனுக்கும் தெரியாத அன்றைக்கு இறைவனுக்கு மட்டுமே தெரிந்த பல விஷயங்கள் திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளன. எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மது நபியால் இதைச் சொல்லி இருக்கவே முடியாது என்பதையும், இறைவன் தான் சொல்லி இருக்க முடியும்…

இம்மொழிப் பெயர்ப்பு பற்றிய குறிப்புகள்

இம்மொழிபெயர்ப்பில் நாம் கடைப்பிடித்துள்ள சில ஒழுங்கு முறைகளை அறிந்து கொள்வது வாசிப்பவர்களுக்கு அதிகப் பயன் தரும். சில அரபுச் சொற்களை அரபுச் சொல்லாகவே பயன்படுத்தியுள்ளோம். அச்சொற்களின் முழுமையான கருத்தைத் தெரிவிக்கும் தமிழ்ச் சொற்கள் கிடைக்காததே இதற்குக் காரணம். சில வசனங்களுக்கு கூடுதல்…