• 1 நாள் அல்லது 2,3 நாட்கள் இஃதிகாஃப் இருக்கலாமா*

✅ இஃதிகாஃப் என்றால் பள்ளிவாசலில் தங்கி வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதாகும்.

இவ்வாறு பள்ளிவாசலில் ஒரு நாள் தங்கி இஃதிகாஃப் இருப்பதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது.

உமர் (ரலி) அவர்கள் அறியாமைக்காலத்தில் ஒருநாள் இஃதிகாப் இருப்பதாக நேர்ச்சை செய்தார்கள்.

இஸ்லாத்திற்கு வந்த பிறகு இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது அதை நிறைவேற்றுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எனவே ஒரு நாள் இஃதிகாப் இருப்பது கூடும்.

حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوبَ عَنْ نَافِعٍ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ كَانَ عَلَيَّ اعْتِكَافُ يَوْمٍ فِي الْجَاهِلِيَّةِ فَأَمَرَهُ أَنْ يَفِيَ بِهِ رواه البخاري

நாஃபிஉ அவர்கள் கூறுகிறார்கள் :
உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தைத் தழுவும் முன்பு), ஒரு நாள் இஃதிகாஃப் இருப்பதாக நான் நேர்ச்சை செய்திருந்தேன். (அந்த நேர்ச்சையை இன்னும் நான் நிறைவேற்றவில்லை. இப்போது அதை நான் நிறை வேற்றலாமா?)” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை நிறைவேற்றும்படி உமர் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

நூல் : புகாரி 3144

Umar bin Al-Khattab said, O Allah’s Messenger (ﷺ)! I vowed to observe I`tikaf for one day during the Prelslamic period.” The Prophet (ﷺ) ordered him to fulfill his vow

ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *