ஹதீஸில் கூறப்படும் உதாரணங்கள்: – ஓர் அறிவியல் பார்வை!!

அல்லாஹ் உலகைப் படைத்து, அதை ஆளும் மனித குல மக்களுக்கு நேர்வழி காட்ட தூதர்களையும் அனுப்பினான். அந்த இறை தூதர்களுக்கு வழி காட்ட நெறி நூல்களையும் இறக்கி அருளினான். இப்படி நன்மை தீமைகளை பிரித்தரிவிக்கக்கூடிய வேதங்களிலும், அதன்படி வாழ்ந்து காட்டிய தூதர்களின் போதனைகளிலும் ஏராளமான உதாரணங்கள் சொல்லப்படுகின்றன. நம் கண்முன்னே உள்ள பொருட்களை உதாரணமாக காட்டியே அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் சத்தியத்தை எளிமையாக விளக்குகிறார்கள்.

இந்த வகையில், ஹதீஸ்களில் இடம்பெறும் உதாரணங்களை அறிவியல் ஆய்வுக்குட்படுத்தி அதன் தன்மைகள், இன்றைய நவீன அறிவியலுக்கு ஒத்துள்ளதா? அல்லது முரண்படுகிறதா என்பதைப் பார்ப்போம். அல்லாஹ்வின் மார்க்கமான இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம். இது எப்போதும் எக்காலத்திற்கும் இயற்கை அறிவியலோடு இணைந்து செல்லும் மார்க்கம். இதில் முரண்பாடுகளை இருப்பதற்கு இடமில்லை.

ஹதீஸ் –1

மறுமை நாளில் மக்கள் அனைவரும், “ அல்லாஹ்வே காப்பாற்று!….அல்லாஹ்வே காப்பாற்று!! என்று பிரார்த்திப்பார்கள்.அப்போது நரகத்தின் மேலே பாலம் கொண்டு வரப்பட்டு வைக்கப்படும். என்று கூறிகொண்டிருந்த போது, “அல்லாஹ்வின் தூதரே! பாலம் என்றால் என்ன?” கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ கால்கள வழுக்கி விழக்கூடிய, சறுக்கக் கூடிய ஓர் இடமாகும்.அதன்மீது இரும்புக் கொக்கிகளும், அகண்டு நீண்ட முற்களும் இருக்கும். அதில் நஜ்து பகுதியில் விளையும் ‘சஅதான்” எனப்படும் முட்செடியின் முற்களைப் போன்ற கொக்கிகள் இருக்கும்;” என்று பதிலளித்தார்கள்.

இறை நம்பிக்கையாளர்கள், கண் சிமிட்டும் நேரத்திலும், மின்னலைப்போன்றும் காற்றைப்போன்றும், ,பறவையைப் போன்றும்…உயர் ரக குதிரைகள்… மற்றும் ஒட்டகங்கள் போன்றும்  (விரைவாக) அப்பாலத்தை கடந்து விடுவார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி)

நூல்: முஸ்லிம்,-302. புஹாரி.-7439. (ஹதீஸ் சுருக்கம்)

நாளை மறுமை நாளில் நரகத்தை  தாண்டிச் செல்ல, ‘சிராத்” என்னும் பாலத்தை கடக்காமல் சுவனத்தில் எவரும் நுழைய முடியாது என்று அல்லாஹ் கூறுகிறான்.

“மேலும் அதனை (பாலத்தை) கடக்காமல் உங்களில் யாரும் போக முடியாது; இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும்.

(அல்குர்ஆன்:19:71.)

சிராத் என்னும் இப்பாலத்தை கடக்கும் இறை நம்பிக்கையாளர்கள் அவர்களின் நன்மையான அமல்களின் பெருமதியைப் பொறுத்து அவர்களின் கடக்கும் வேகமும் இருக்குமென்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். அப்படி கடக்கும் வேகத்தை வரிசைப்படுத்துகிறார்கள். கண் சிமிட்டும் நேரம் மின்னல் வெட்டும் நேரம், காற்றைப் போன்று பறவை, பந்தைய குதிரை, மற்றும் ஒட்டக வேகம்.

அறிவியல் பார்வையில் இந்த தர வரிசை சரியான ஒன்றுதானா? பார்ப்போம்.

கண் இமைக்கும் நேரம் அல்லது கண் சிமிட்டும் நேரம், என்பது அறிவியல் ஆய்வில், ஒரு வினாடியில் பத்தில் ஒரு பங்கு நேரம்.1/10 வினாடிகள். அதிகபட்சம்  300-400 மில்லி வினாடிகள்.அதாவது  0.33 வினாடி நேரம் (அரை வினாடிக்கும் சற்று கூடுதல்) என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஒருவினாடிக்கு மூன்று லட்சம் கி,மீ.வேகத்தில் வரும் ஒளியானது விழித்திரையில் பட்டு 1/300,000,000,000 seconds. வினாடிகளில் திருப்பி அனுப்புகிறது.

( On average the human blink lasts only a tenth of a second which is 100 milliseconds. Wow, that’s fast! Sometimes, it can even last up to 400 milliseconds.The speed of the twinkling of an  eye is faster  than one hundreds billionths of a second. 1/300,000,000,000.seconds.)

கண் இமைக்கும் நேரத்தின் வேகத்தை அறிவதற்கு, அல் குர்ஆனில் சில வசனங்களை அல்லாஹ் கூறுகின்றான். சுலைமான் (அலை) அவர்கள் ஏமனில் ஆட்சி  செய்யும் பெண்ணின் சிம்மாசனத்தை யார் எடுத்து வருவது என்று தமது அவையில் வினவிய போது, வேதம் வழங்கப்பட்ட ஒருவர் கண் இமைப்பதற்குள் கொண்டு வருவேன்,என்று சொல்லி… அதன்படி கொண்டு வந்தார்.

இறை வேதத்தில் ஞானத்தைப் பெற்றிருந்த ஒருவர், “ உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள், அதை உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன்” என்று கூறினார்; அவர் சொன்னவாறே அது தம்மிடம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும்;

(அல்குர்ஆன்:27:40.)

நபி சுலைமான் (அலை) அவர்கள் பாலஸ்தீன் நாட்டில் பைத்துல்முகத்தஸ் தலை நகரில் ஆட்சி செய்தார்கள். ஏமன்  நாட்டு நாட்டு அரசி ஸன்ஆ தலை நகரில் ஆட்சி புரிந்தார். பாலஸ்தீனுக்கும் ஏமனுக்கும் இடையில் சுமார் 2265 K.M. ( 1407 மைல்கள்).போய் வருவதற்கான மொத்த தூரம் (2265 + 2265 =  4530  KM.) நான்காயிரத்து ஐநூறுக்கும்  அதிகமான கிலோமீட்டர் தூரத்தை கண் இமைக்கும் நேரத்தில் சென்று வரும் ஆற்றல். கண் சிமிட்டும் நேரத்தின் அளவு. ஒரு வினாடியில் பத்தில் ஒரு பங்கு. (1/10.)

இது போலவே இறுதி நாள் வரும் வேகமும் கண் சிமிட்டும் நேரமே!

இறுதி நாள் நிகழ்வதற்கு அதிகநேரம் தேவையில்லை.கண் சிமிட்டும் நேரம், ஏன் அதைவிடக் குறைந்த நேரம் போதுமானதாகும்.

(அல்குர்ஆன்:16:77.)

சிராத் என்னும் பாலத்தை நல்லடியார்களில் சிலர் கண் இமைக்கும் வேகத்தில் அதைக்  கடப்பார்கள்.இதை அடுத்து சிலர் மின்னல் வேகத்தில் கடப்பார்கள்.மின்னலின் வேகம் என்ன?

மின்னல் என்பது ஒளி அலை அல்ல.மேகங்களுக்கிடையில் ஏற்படும் மின் தூண்டல்.மேகத்திலிருந்து பூமியை நோக்கி வரும் (Downward strike) மின்னலின் வேகம் வினாடிக்கு 200 கி.மீ, பூமியிலிருந்து மேகத்தை நோக்கிக் செல்லும் (Upward strike ) மின்னலின் வேகம் வினாடிக்கு ஒரு லட்சம் கி.மீ. (100,000 கி.மீ ).

How lightning happens: Dr.Karl’s step-by-step guide..http://www.abc.net.au>programs>the…

Visible satellite image of Tropical Cyclone Olivia a few hours before it crossed

Barrow Island, Australia, setting a new world-record wind gust of 253 mph.

அடுத்து…நல்லடியார்கள் “காற்றைப் போன்றுவிரைந்து  கடப்பார்கள். காற்றின் வேகம் சராசரி 6 -12 mph (10-19 km) நடுத்தரமான காற்றின் வேகம் சுமார். மணிக்கு 40 – 50  மைல் வரையிலும்; கஜா புயல் போன்ற நேரங்களில் அதன் வேகம் மணிக்கு 70 -100  மைல் ஆகவும் இருக்கும். புயல் காற்றின் அதிக பட்ச வேகம் 1996 ம் வருடம் ஏப்ரல் 10 அன்று ஆஸ்திரேலியாவில் பதிவாகியது, மணிக்கு 408 கி.மீ   ( 253 மைல் )

இதைத்தொடர்ந்து, “ நல்லடியார்கள் “பறவைகள் போன்று விரைந்து கடப்பார்கள்.” பறவைகளில் சற்று பெரிதான “கூழைக்கிடா’ எனப்படும் பெலிக்கன் பறக்கும் வேகம் மணிக்கு 40 மைல்,( 65கி.மீ.) பால்கன் கழுகுகள் மணிக்கு சுமார் 250 கி.மீ வேகத்திலும்,புறா பறக்கும் சராசரி வேகம் மணிக்கு 60 கி.மீ. பந்தைய புறாக்கள் மணிக்கு 140 கி.மீ பறக்கும்.

கொடும் நரகத்தை கடக்க உதவும் சிராத் என்னும் பாலத்தை நல்லடியார்களில் சிலர் உயர் ரக “பந்தைய குதிரைகள்” வேகத்தில் கடந்து செல்வர். பொதுவாக பந்தைய குதிரைகளின் வேகம் மணிக்கு 40 – 48  கி.மீ. அதிக பட்சம் வேகம் மணிக்கு 70.76 கி.மீ  (43.97 மைல்) ஆகும்.

இதை தொடர்ந்து சில நல்லடியார்கள் “ஒட்டக வேகத்தில்” பாலத்தைக் கடப்பார்கள். ஒட்டகத்தின் சராசரி வேகம் மணிக்கு 14 – 19 கி.மீ  ( 8.7 – 11.8 மைல்).

இஸ்லாம் உரைக்கும் அனைத்து செய்திகளும் அறிவுக்குப் பொருத்தமாகவும்,அறிவியலுக்கு இணக்கமாகவுமே இருக்கும்.,அச்சத்திய செய்திகள் இவ்வுலகில் நம் கண் முன்னே காண்பவையாக இருந்தாலும் சரியே, நம் கண் காணாத சுவனம்,நரகம் குறித்து செய்தியாக இருந்தாலும் சரியே! அனைத்தும் முரண் இன்றியே தெளிவாக புரியும்படியே இருக்கும். 1439 ஆண்டுகளுக்கு முன்பு, படிப்பறிவில்லா பாலைவன மனிதர், இன்றைய  அறிவியல் உண்மைகளை அன்றே சொன்னதன் காரணம்….அவர்  படைத்த இறைவனின் தூதராக இருந்ததே!

இன்னும், இந்தக் குர்ஆனில் (ஹதீஸில்) மனிதர்களுக்காக சகலவிதமான உதாரணங்களையும், அவர்கள் சிந்தித்துப்  பார்ப்பதற்காக நாம் திடமாக எடுத்துக் கூறியுள்ளோம்.

(அல்குர்ஆன்:39:27.)

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *