ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை முறை மற்றும் முக்கிய தகவல்கள்
பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத்துகள் கொண்டது.
பெருநாள் தொழுகைக்கு பாங்கு இகாமத் கிடையாது.
(நூல்: புஹாரி 960)
தொழும் முறை
முதலில் கைகளை உயர்த்தி
அல்லாஹு அக்பர் என்று தக்பீர் கட்டியவுடன் அல்லாஹும்ம பாஇத் பைனி அல்லது வஜ்ஜஹ்து என்ற ஆரம்ப துஅவை ஓத வேண்டும்.
பிறகு அதிகப்படியாக 7 தக்பீர்கள் (அல்லாஹு அக்பர் என்று) சொல்ல வேண்டும். கைகளை உயர்த்தி உயர்த்தி கட்ட வேண்டிய அவசியமில்லை.
பிறகு ஃபாத்திஹா (அல்ஹம்து) சூரா – அடுத்து துணை சூரா ஓத வேண்டும்.
பிறகு வழக்கம் போல் ருகூஃ – ஸஜ்தா செய்து முடித்து இரண்டாம் ரக்அத்திற்கு எழுந்து அல்லாஹு அக்பர் என்று தக்பீர் கட்ட வேண்டும்.
பின்னர் அதிகப்படியாக 5 தக்பீர்கள் (அல்லாஹு அக்பர் என்று) சொல்ல வேண்டும். கைகளை உயர்த்தி உயர்த்தி கட்ட வேண்டிய அவசியமில்லை.
பிறகு ஃபாத்திஹா (அல்ஹம்து) சூரா – அடுத்து துணை சூரா ஓத வேண்டும்.
பிறகு வழக்கம் போல் ருகூஃ ஸஜ்தா செய்து அத்தஹிய்யாத்து இருப்பு முடிந்து ஸலாம் கொடுத்து தொழுகையை முடிக்க வேண்டும்.
(அபூதாவூத் 971, பைஹகீ 5968, முஸ்லிம் 1592)
முக்கிய தகவல்கள்:
பெருநாள் தினத்தில் அல்லாஹுவை அதிகம் பெருமைப்படுத்தும் வகையில் அல்லாஹு அக்பர் என மனதிற்குள் அதிகமாக தக்பீர் சொல்பவர்களாக இருக்க வேண்டும்.
(புகாரீ 971)
தொழுகை முடித்த பிறகு தான் பயான் – சொற்பொழிவு நிகழ்த்த வேண்டும். பிறகு அனைவரின் தேவைகள் & நலனுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்.
(புகாரீ 956)
மாதவிடாய் பெண்களாக இருந்தால் அவர்கள் பெருநாள் தொழுகையை மட்டும் தொழாமல், அதிகம் தக்பீர் சொல்பவர்களாகவும், அங்கு நடைபெறும் பயானை கேட்பவர்களாகவும், அதிகமாக பிரார்த்தனை செய்து நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பு தேடுபவர்களாக இருக்க வேண்டும்.
(முஸ்லிம் 1615)
இதனை பிறருக்கும் பகிர்ந்து நன்மை பெறுவோம்.