ஸித்ரத்துல் முன்தஹா
ஸித்ரத் என்றால் இலந்தை மரம் என்பது பொருள். முன்தஹா என்றால் கடைசி எல்லை எனப் பொருள். ஆறாம் வானத்தில் உள்ள மிகவும் பிரம்மாண்டமான மரத்தின் பெயரே ஸித்ரத்துல் முன்தஹா எனப்படும். (திருக்குர்ஆன் 53:14, 16)
இம்மரத்தின் ஒவ்வொரு இலையும் யானையின் காது போல் பெரிதாக இருக்கும். இம்மரத்தில் பலவிதமான வர்ணங்கள் அமைந்து கண்ணைப் பறித்ததாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டனர். (புகாரி 349, 3207, 3342, 3887)