*ஸலவாத் (صَلَوَات)எப்படி கூறுவது❓*
*நபி(ஸல்)அவர்கள் மீது ஸலவாத் எவ்வாறு கூறுவது என்பது அறியும் ஆனால் நாம் ஒவ்வொரு தடவையும் நபி(ஸல்)அவர்கள் பெயர் செவியுறும் போது நாம் எவ்வாறு பதில் கூறுவது!முழு ஸலவாத்தைக் கூற வேண்டுமா*❓
அல்லது *வெறுமனே ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம்* என்று கூறினால் போதுமா❓
தொழுகையில் அத்தஹிய்யாத் இருப்பில் ஸலவாத் ஓதும் போது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்தைத் தான் ஓத வேண்டும். மற்ற நேரங்களில் ஸல்லல்லாஹு *அலைஹி வஸல்லம்* என்றோ *அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம்* என்றோ கூறிக் கொள்ளலாம்.
பின்வரும் ஹதீஸ் இதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது
ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களின் முன்னால் அமர்ந்தார். அல்லாஹ்வின் தூதரே *உங்கள் மீது ஸலாம் கூறுவதை நாங்கள் அறிந்து வைத்துள்ளோம். நாங்கள் தொழும் போது எங்கள் தொழுகையில் எப்படி உங்கள் மீது ஸலவாத் கூறுவது*? ஸல்லல்லாஹு அலைக்க என்று கேட்டார்.
இந்த மனிதர் *இக்கேள்வியைக் கேட்காமல் இருந்திருக்கலாமே* என்று நாங்கள் நினைக்குமளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மவுனமாக இருந்தனர்.
பின்னர் நீங்கள் என் மீது ஸலவாத் கூறும் போது *அல்லாஹும்ம் ஸல்லி அலா முஹம்மதின் அன்னபிய்யில் உம்மிய்யி வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம வபாரிக் அலா முஹம்மதின் அன்னபிய்யில் உம்மிய்யி கமா பாரக்த அலா இப்ராஹீம் வ வலா ஆலி இப்ராஹீம் இன்னக ஹமீதும் மஜீத்* என்று கூறுங்கள் என விடை அளித்தார்கள்.
நூல் : அஹ்மத் 16455
கேள்வி கேட்ட மனிதர் தொழுகையின் போது ஸலவாத் கூறுவது எப்படி என்று கேட்டார். அப்படிக் கேட்கும் போதே *ஸல்லல்லாஹு அலைக்க* என்று ஸலவாதும் கூறினார்.
(*நேரடியாக ஸலவாத்து கூறும் போது அலைக (உங்கள் மீது) என்றும் படர்க்கையாகக் கூறும் போது அலைஹி (அவர் மீது) என்று கூற வேண்டும்.)*
ஸல்லல்லாஹு அலைக்க என்று அவர் ஸலவாத் கூறியதை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மறுக்கவில்லை. திருத்தவில்லை. தொழுகையில் எப்படி ஸலாவாத் ஓதுவது என்பதைக் கற்றுக் கொடுத்தார்கள்.
*எனவே தொழுகை அல்லாத நேரங்களில் ஸலவாத் கூறும் போது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று கூறலாம்*.
நபிகள் நாயகம் ஸல் அவர்களிடம் இப்படி நபித்தோழர்கள் கூறியுள்ளதை *நஸயீ 2768 அபூதாவூத் 1419* காணலாம்
இந்த ஹதீஸ்களிலும் ஸல்லல்லாஹு அலைக்க என்று நபித்தோழர்கள் நேருக்கு நேராக ஸலவாத் கூறியுள்ளனர். அதை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மறுக்கவில்லை.
_________________
*ஏகத்துவம்*