ஸலஃபியிசத்தை சுருக்கமாக புரிந்து கொள்ள
நாம் – குர் ஆனுக்கு முரணாக ஒரு கருத்தை ஒரு அறிவிப்பாளர் சொன்னால் அதை மறுக்க வேண்டும்.
சலஃபி – நம்பகமான அறிவிப்பாளர் என்றால் மறுக்கவே கூடாது.
நாம் – அறிவிப்பாளர் நம்பகமானவர் என்றால் அந்த ஹதீஸை மறுக்கவே கூடாதா?
சலஃபி – ஆமாம். மறுக்கக் கூடாது.
நாம் – நம்பகமானவர் என்று எப்படி முடிவு செய்வது?
சலஃபி – புகாரி இமாம் ஆய்வு செய்து விட்டார்.
நாம் – ஷுதூத் வகை ஹதீஸ் அடிப்படையில் பெரும்பான்மை – சிறுபான்மை என சொல்லி அந்த நம்பகமான அறிவிப்பாளரின் கூற்றை மறுக்க தானே செய்கிறீர்கள்.?
சலஃபி – அது, பெரும்பான்மையினரின் அறிவிப்பு சரியாக இருக்கும் என்பதால்.
நாம் – அப்படின்னா அந்த குறைந்த எண்ணிக்கையில் அறிவித்தவர்கள் பொய்யர்களா?
சலஃபி – பொய்யர்கள் என்று சொல்லக்கூடாது. மனித பலவீனத்தால் நிகழ்ந்த பிழை என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
நாம் – இந்த புரிதலை குர் ஆனுக்கு முரணாக அவர்கள் அறிவிக்கும் போது எடுக்க முடியாதா?
சலஃபி – கூடாது.. அவங்க நம்பகமான அறிவிப்பாளர்.
ஆக,
குர் ஆனுக்கு முரணா வந்தா.. அவங்க நம்பகமானவர்னு குருட்டு நம்பிக்கை வைக்கணும். அதுவே வேறு சிலருடைய அறிவிப்புக்கு முரணா வந்தா மனித பலவீனம்னு சொல்லி அவங்க கூற்றை மறுக்கணும்..
குர் ஆனை விட சில அறிவிப்பாளருக்கு கூடுதல் முக்கியத்துவம !
இது சலஃபுகளின் கொள்கை நம்பர் 1.
நாம் ஆய்வு செய்தால்.. ..
நமக்கு ஆய்வு செய்ய தகுதியில்லை..
அதுவே புகாரி இமாம் ஆய்வு செய்தால்..
அதில் பிழையே வராது..
அல்லாஹ்வுக்கு பிழை வராதல்லவா? அது போல !
இது சலஃபுகளின் கொள்கை நம்பர் 2.
ஆக்கம்: நாஷித்