——————
ஷைத்தான்
——————-
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! எங்களின் உங்களில் சில (தீய) எண்ணங்கள் ஏற்படுகிறது. அதனை வெளியில் பேசுவதை விட கரிக்கட்டைகளாகி விடுவது எங்களுக்கு விருப்பத்திற்குரியதாகும்” என்று கூறினார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹு அக்பர் (அல்லாஹ்வே மிகப் பெரியவன்), அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் (என்று கூறிவிட்டு ஷைத்தானாகிய) அவனுடைய சூழ்ச்சியை தீய எண்ணங்களைப் போடுவதன் பக்கம் திருப்பிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அபூதாவூத் (4448)
நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! எங்கள் உள்ளங்களில் சில விஷயங்களை நாங்கள் எண்ணுகின்றோம். அதனை வெளியில் பேசுவதை விட கரிக்கட்டைகளாகி விடுவது எங்களுக்கு விருப்பத்திற்குரியதாகும்” என்று கூறினர்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்! உங்களிடம் தீய எண்ணங்களைப் போடுவதைத் தவிர (வேறு எதற்கும் ஷைத்தானாகிய) அவன் ஆற்றல் பெறவில்லை” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அஹ்மத் (2995)
—————————-
ஏகத்துவம்