ஷிர்க் என்றால் என்ன?
‘ஷிர்க்‘ என்ற அரபி வார்த்தைக்கு ‘இணை கற்பித்தல்‘ என்று பொருள்.
பல கடவுள்கள் இருப்பதாக நம்புவதும்,
சிலைகளை வணங்குவதும் மாத்திரம் தான் ஷிர்க்’ என்று நம்மில் சிலர் புரிந்து வைத்திருக்கின்றனர்.
இது முழுமையான புரிதல் அல்ல.
அல்லாஹ்விற்கு நிகராக எவரும் இல்லை.
அல்லாஹ்விற்கு சமமாக எதுவும் இல்லை
என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.
ஒரே இறைவனாகிய அல்லாஹ்வுடைய பண்புகள், ஆற்றல்கள் அவனுக்கு இருப்பது போல் வேறு யாருக்காவது இருப்பதாக நம்பினால் அதுவும் ஷிர்க் ஆகும்,
அல்லாஹ்வுக்குச் செய்யும் வழிபாடுகளை வேறு யாருக்காவது செய்தால் அதுவும் ஷிர்க் ஆகும்.
உதாரணமாக பிரார்த்தனை செய்தல் என்பது ஓர் வணக்கமாகும்.
நமது இன்ன பிற தேவைகளை நிறைவேற்ற அல்லாஹ்விடம் மாத்திரம் தான் துஆ கேட்க வேண்டும்.
மாறாக அல்லாஹ்வின் படைப்பாகிய மகான்களிடமோ அல்லது தர்ஹாக்களிலோ துஆ கேட்டால் அதுவும் ஷிர்க் ஆகும்.
நேர்ச்சை செய்தல் ,
அறுத்துப் பலியிடுதல்,
குழந்தை பாக்கியம் கோரல்,
சத்தியம் செய்தல்,
பாதுகாக்க துஆ கோருதல்,
சிரம்பணிதல்,
போன்றவைகள் யாவும் அல்லாஹ்விடம் மாத்திரமே செய்யப்பட வேண்டும்.
இவைகளை அல்லாஹ் அல்லாத வேறு யாருக்கு செய்தாலும் அதுவும் ஷிர்க் ஆகும்,
முஹம்மது நபிக்கு பிறகு வேறு யாருக்காவது வஹீ எனும் இறைச்செய்தி வருவதாக நம்பினாலும் அதுவும் ஷிர்க் ஆகும்,
நல்ல நாள்/கெட்ட நாள்
நல்ல நேரம்/கெட்ட நேரம்
ராசிபலன்/ஜோஷியம்/பஞ்சாங்கம்
ஜாதகப் பொருத்தம்/பெயர் பொருத்தம்
பறவை சகுனம்/பூனை சகுனம்/விதவை சகுனம்
ஃபால் கிதாபு போன்றவைகளை
நம்பிவிட்டால்….. அதுவும் ஷிர்க் ஆகும்.
சூனியத்தின் மூலம் ஒருவனால் ஒருவனை பாதிப்படைய செய்ய முடியும் என்று நம்பினால்…….. அதுவும் ஷிர்க் ஆகும்,
கண்திருஷ்டி/கண்ணேறு எனும் பொறாமை பார்வையால் பாதிப்பு ஏற்படும் என்று நம்பினால்……. அதுவும் ஷிர்க் ஆகும்.
யாருக் கண்ணும் பட்டுவிடக்கூடாதென்று ஆரத்தி எடுப்பது,
மிளகாய்/உப்பு எரிப்பது,
பூசனிக்காய்/தேங்காய் உடைப்பது,
திருஷ்டி பொம்மை வைப்பது,
பச்சைத் துணியில் தேங்காய் வைப்பது,
வாகனத்தில் கருப்பு கயிறு கட்டுவது,
கடை மற்றும் வீடுகளில் தகடுகளை மாட்டுவது,
உடம்பில் தாயத்துகளை தொங்க விடுவது,
போன்றவைகள் யாவும் ஷிர்க் ஆகும்.
(முக்கிய குறிப்பு:- ஷிர்க் செய்பவர் தொழ வைத்தால் அவரை பின்பற்றி தொழக்கூடாது)
அவ்லியாவை நாங்கள் வணங்கவுமில்லை,
அவர்களிடம் துஆவும் கேட்கவில்லை,
எங்களுக்காக அவ்லியாக்கள் அல்லாஹ்விடம் சிபாரிசு கேட்டு நெருக்கத்தை ஏற்படுத்த கோரிணோம், என்கிறீர்களா!
கீழேயுள்ள திருக்குர்ஆன் வசனத்தை படித்து பார்த்து உஷாராகி விடுங்கள்.
கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது.
அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் (கூறுகின்றனர்)
“அல்லாஹ்விடம் எங்களை (இவர்கள்) மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை” (என்று கூறுகின்றனர்).
அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.
திருக்குர்ஆன்[39:3]
ஏகத்துவம்