ஷாபான் பிறை பதினைந்துக்கு பின் நோன்பு நோற்பதை நபி ஸல் அவர்கள் தடை செய்துள்ளார்களா ..?
عن العلاء بن عبدالرحمن عن أبيه عن أبي هريرة عن النبي عليه الصلاة والسلام قال: ( إذا انتصف شعبان فلا تصوموا)
رواه أحمد(٩٤١٤) وأبو داود(٢٣٣٧) والترمذي(٧٣٨)
ஷஃபான் மாதத்தின் அரைவாசியை அடைந்தால் நீங்கள் நோன்பு நோற்க்க வேண்டாம் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்
இந்த ஹதீஸ் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத மறுக்கப்பட வேண்டிய செய்தி என இமாம் அஹ்மத் , இமாம் இப்னு ஹஜர், இமாம் இப்னு மஈன், இமாம் பைஹகீ, இமாம் அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ, அபூ ஸுர்ஆ அர்ராஸி, இமாம் தஹபீ, இமாம் இப்னு ரஜப் போன்ற பல ஹதீஸ்கலை வல்லுனர்கள் இதன் அறிவிப்பாளர் வரிசையை ஏற்றுக்கொள்ள முடியாத செய்தி என குறைகண்டு விமர்சனம் செய்துள்ளார்கள்.
நபி ஸல் அவர்கள் ரமளானுக்கு முந்திய நாளும் அதற்கு முந்திய நாளும் நோன்பு (ஷஃபானின் இறுதி இரண்டு நாள் வரை நோன்பு ) பிடிக்க வேண்டாம் என தடை செய்த செய்தி அதுவரை நோன்பு பிடிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துகின்றது.
நபி ஸல் அவர்கள் ஷஃபான் மாத்தில் அதிகம் நோன்பு நோற்றார்கள் என்ற பொதுவான செய்துக்கு இந்த செய்தி முரணாக உள்ளது இப்படி பல முக்கிய காரணங்களால் இந்த செய்தி பலஹீனமான செய்தி என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஷஃபான் பதினைந்துக்கு பின் நோன்பு பிடிக்க எந்த தடையும் ஆதாரபூர்வமான செய்திகளில் வரவில்லை என்பதோடு வந்திருக்க கூடிய இந்த ஒரு செய்தியும் பலஹீனமான செய்தியாகும்.
ஷஃபான் மாதத்தில் நோன்பு நோற்பதை நபி ஸல் வலியுறுத்தி கூறி உள்ளார்களா..?
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், “நீர் இந்த (ஷஅபான்) மாதத்தின் இறுதியில் ஏதேனும் நோன்பு நோற்றீரா?” என்று கேட்டார்கள். அம்மனிதர், “இல்லை” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீர் ரமளான் நோன்பை முடித்ததும் அதற்குப் பகரமாக இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக!” என்று கூறினார்கள். இதை முதர்ரிஃப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்:2155
நபி ஸல் அவர்கள் ஷஃபானில் நோன்பு நோற்றது மற்றுமின்றி இம்மாதத்தில் நோன்பு நோற்காதவரை ரமளான் மாதம் முடிந்ததும் இரண்டு நாட்கள் நோன்பு நோற்கும்படி வலியுறுத்தி கூறி உள்ளார்கள
ஏகத்துவம்