வேட்டி இல்லாவிட்டால் பேண்ட் அணியலாமா?
இஹ்ராம் கட்டியவர் ஹஜ்ஜை நிறைவேற்றி முடிக்கும் வரை, தைக்கப்படாத மேலாடை மற்றும் வேட்டி அணிய வேண்டும். தைக்கப்பட்ட ஆடைகளை அணியக்கூடாது.
இஹ்ராம் கட்டியவர் எதை அணியலாம்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ”இஹ்ராம் கட்டியவர் சட்டையையோ, தலைப்பாகையையோ, தொப்பியையோ, கால்சட்டையையோ அணிய வேண்டாம். …..” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 134, 366, 1542, 1842, 5794, 5803, 5805, 5806, 5852.
எனினும், தைக்கப்படாத ஆடைகள் கிடைக்கும் போது தான் இவற்றைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். தைக்கப்படாத ஆடைகள் கிடைக்காத பட்சத்தில் தைக்கப்பட்டதையும் அணிந்து கொள்ளலாம்.
”யாருக்குச் செருப்பு கிடைக்கவில்லையோ, அவர் காலுறைகளை அணிந்து கொள்ளட்டும். யாருக்கு வேட்டி கிடைக்கவில்லையோ, அவர் கால் சட்டைகளை அணிந்து கொள்ளட்டும்” என்பது நபிமொழி.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி); நூல்: புகாரி 1841, 1843, 5804, 5853.
எனவே, முயற்சி செய்யும் வேட்டி கிடைக்கவில்லையெனில், பெர்முடாஸ் அல்லது பேண்ட் அணிவது குற்றமாகாது.