வெள்ளைப்பூண்டை சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு வரக் கூடாது என்பது தான் சட்டம்
பொதுவாக தடை செய்யப்பட்டது அல்ல.
عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي غَزْوَةِ خَيْبَرَ
مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ يَعْنِي الثُّومَ فَلَا يَقْرَبَنَّ مَسْجِدَنَا
கைபர் போரின்போது நபி (ஸல்) அவர்கள், இந்தச் செடியிலிருந்து –அதாவது வெள்ளைப்பூண்டுடைச்– சாப்பிட்டவர் நம் பள்ளிவாசலுக்கு நெருங்க வேண்டாம் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),
நூல் :புகாரி (853)
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
கைபர் போரின்போது, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வெள்ளைப் பூண்டையும் நாட்டுக் கழுதைகளின் இறைச்சிகளையும் உண்ண வேண்டாமெனத் தடை விதித்தார்கள்.
நாஃபிஉ(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் மட்டுமே வெள்ளைப் பூண்டு உண்ண வேண்டாம் என்பது இடம் பெற்றுள்ளது.
நாட்டுக் கழுதைகளின் இறைச்சி (தொடர்பாக) சாலிம்(ரஹ்) அவர்களின் வாயிலாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸஹீஹ் புகாரி : 4215.
மேற்கண்ட இரண்டு செய்திகளையும் இணைத்து படித்தால் விளங்கிக்கொள்ளலாம்..