விழித்தால் தான் அமல் செய்ய முடியும்
புனிதமான லைலத்துல் கத்ர் இரவில் இன்ஷா அல்லாஹ் அதிகமான அமலை செய்வோம்
ஏன்னென்றால் அன்று இரவு செய்யப்படும் ஒவ்வொரு அமல்களும் ஆயிரம் மாதங்கள் செய்தால் எந்த அளவுக்கு நன்மை கிடைக்குமோ அந்த அளவுக்கு நன்மை கிடைக்கும்.
லைலத்துல் கத்ரை பற்றி அல்லாஹ் குர்ஆனில் சொல்லிக்காட்டுகிறான்
لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ
மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது.
திருக்குர்ஆன் 97:3
இப்படி சிறந்தாக சொல்லுகிறான்.
அந்த இரவு எப்பொழுது?
————————————-
இதை பற்றி நபி(ஸல்) அவர்கள் விளக்கும் போது கடைசி பத்து இரவுகளில் ஒற்றைப்படை இரவில் தேடுங்கள் எனக் கூறினார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!’
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி :2017
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்ததும் நோன்பு நோற்கிறவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்! லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!’
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 2014
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடைசி ஒற்றை படை இரவில் தேடுங்கள் என இதிலிருந்து விளங்குகிறது
கடைசி ஒற்றைப்படையான 21, 23, 25, 27, 29 ஆகிய இரவுகளில் தேடவேண்டும்
————————————————
லைலத்துல் கத்ர் இரவில் கேட்க வேண்டிய துஆ.
அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஅஃபு அன்னீ
பொருள்: யா அல்லாஹ்! நீ மன்னிக்கக் கூடியவன். மன்னிப்பை விரும்புபவன். என்னை மன்னித்து விடு!
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : திர்மிதீ 3435