இறைவனின் திருப்பெயரால்

வாரம் ஒரு ஸூரா!
மனனம் செய்ய!!
தொழுகைக்கு உதவ கூடிய சிறு சூராக்கள்!

அரபு தமிழ் ஆங்கிலம்
ஆகிய மொழி களில்
தமிழ் விளக்கங்களுடன்

வெள்ளி கிழமை தோரும் வெளிவரும்

அரபு தெரியாதவர்கள்
எழிதில் மனனம் செய்து
கொள்ள வசதியாக இத்
தொடர் ஆரம்பிக்கபட்டுள்ளது,
இதனை மற்றவர்களும்
பயன்பெற ! உங்கள்
இணையதளத்தில் பகிரவும்!!

(2. ஸூரத்துல் பகரா, 255- அந்த மாடு)
(ஆயத்துல் குர்ஷி) آية الكرسي

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை.

* அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது.*

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்?

அவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவன் நாடியதைத் தவிர.

அவனது இருக்கை, வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று. அவன் உயர்ந்தவன்; மகத்துவமிக்கவன்.

‎ ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلْحَىُّ ٱلْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُۥ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُۥ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۗ مَن ذَا ٱلَّذِى يَشْفَعُ عِندَهُۥٓ إِلَّا بِإِذْنِهِۦ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَىْءٍ مِّنْ عِلْمِهِۦٓ إِلَّا بِمَا شَآءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ ۖ وَلَا يَـُٔودُهُۥ حِفْظُهُمَا ۚ وَهُوَ ٱلْعَلِىُّ ٱلْعَظِيمُ

Allahu laaa ilaaha illaa Huwal Haiyul Qaiyoom;

laa taakhuzuhoo sinatunw wa laa nawm;

lahoo maa fissamaawaati wa maa fil ard;

man zal lazee yashfa’u indahooo illaa bi-iznih;

ya’lamu maa baina aydeehim wa maa khalfahum

wa laa yuheetoona bishai’im min ‘ilmihee illaa bimaa shaaa’;

wasi’a Kursiyyuhus samaawaati wal arda

wa laa Ya’ooduhoo hifzuhumaa; wa Huwal Aliyyul ‘Azeem

அல்லாஹூ லாயிலாக (لآاِلٰه ) இல்லா ஹுவல்(هو) ஹய்யுல் கையூம்

லா தஃஹுதுஹு (تاْخُذُهُ) ஸினத்துவ் வளா நவ்முன்

லஹூ(لهُ) மா பிஸ் ஸமாவாத்தி வமா பில் அர்ளி

மன்தல்லதீ (منْ ذَاالَّذِيْ) யஷ்பஊ. ( يشْفعُ) இன்தஹு இல்லா பி(B) இத்னிஹி

யஃலமு (يعْلم) மா வை(B)ன(بيْنَ) அய்தீஹிம் (اَ يدِ يهِمْ)

வமா கல்பஹூம் (خلْفَهُمْ)வளா யுஹீதூன (يُحِيْطُوْنَ)

பி(B)ஷைய்யின் மின் இல்மிஹி இல்லா பி(B)மா ஷாஅ (شآءَ)

வஸிய (و سِعَ) குர்ஸிய்யுஹு ஸ் ஸமாவாத்தி வல் அர்ள வளா யஊதுஹு (يءُوْدُهُ) ஹிப்(F)ழுஹுமா வஹுவல் அழிய்யுல் அழீம்.

God! There is no god except He, the Living, the Everlasting. Neither slumber overtakes Him, nor sleep. To Him belongs everything in the heavens and everything on earth. Who is he that can intercede with Him except with His permission? He knows what is before them, and what is behind them; and they cannot grasp any of His knowledge, except as He wills. His Throne extends over the heavens and the earth, and their preservation does not burden Him. He is the Most High, the Great.

இன்ஷாஅல்லாஹ்!
அடுத்த வெள்ளி அன்று
தொடரும்!!

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *