——————
வானவர்கள்
——————
மலக்குமார்களின் தோற்றம்
—————————————-
நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :
வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டுள்ளனர். ஜின்கள் நெருப்பால் படைக்கப்பட்டுள்ளனர். ஆதம்(அலை) உங்களுக்கு வர்ணிக்கப்பட்ட மண்ணால் படைக்கப்பட்டார்.
அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி)
நூல் : முஸ்லிம் 5314
வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். (அவன்) வானவர்களை இரண் டிரண்டு, மும்மூன்று நான்கு நான்கு சிறகு களைக் கொண்ட தூதர்களாக அனுப்புவான். அவன் நாடியதைப் படைப்பில் அதிகமாக்குவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.
(அல்குர்ஆன் 35:1)
நபி (ஸல்) அவர்கள், ஜிப்ரயீல்(அலை) அவர்களை 600 இறக்கை உடையவர்களாகக் கண்டார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊது (ரலி)
நூல் : புகாரீ 4857
எண்ணிக்கை
—————————————-
எனக்கு பைதுல் மஃமூர் காட்டப்பட்டது. நான் அதைப் பற்றி ஜிப்ரயீடம் கேட்டேன். அவர் இது பைதுல் மஃமூர் ஆகும். இதில் நாள்தோறும் எழுபதினாயிரம் மலக்குமார்கள் தொழுகின்றனர். அவர்கள் அங்கிருந்து வெளியேறிய பின்னர் மீண்டும் அவர்களில் யாரும் அதில் நுழைவதில்லை என்று கூறினார்கள்.
நூல் : புகாரீ 3207
பெயர் கூறப்பட்ட மலக்குமார்கள்
—————————————-
- ஜிப்ரீல் (அலை) : (அல்குர்ஆன் 2:98)
- மிக்காயீல் (அலை) : (அல்குர்ஆன் 2:98)
- இஸ்ராஃபீல் (அலை) : (முஸ்லிம் 1289)
- மாலிக்(அலை) இவர் நரகத்தின் காவலாளி ஆவார். (43:77)
வஹீயை கொண்டு வருதல்
—————————————-
”என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எனவே எனக்கே அஞ்சுங்கள்!” என்று எச்சரிக்குமாறு தனது உயிரோட்டமான கட்டளையுடன் வானவர்களை தான் நாடிய அடியார்களிடம் அவன் அனுப்புகிறான்.
(அல்குர்ஆன் 16:2)
நன்மை, தீமைகளைப் பதிவு செய்தல்
—————————————-
உங்கள் மீது மரியாதைக்குரிய எழுத்தர்களான கண்காணிப்பாளர்கள் உள்ளனர். நீங்கள் செய்வதை அவர்கள் அறிவார்கள்.
(அல் குர்ஆன் 82 :10,11,12)
வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத் தெழுதும் போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை.
(அல்குர்ஆன் 50:17,18)
உயிரைக் கைப்பற்றுதல்
—————————————-
உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள் என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 32:11)
பாதுகாவல்
—————————————-
மனிதனுக்கு முன்னரும், பின்னரும் தொடர்ந்து வருவோர் (வானவர்) உள்ளனர். அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனைக் காப்பாற்றுகின்றனர்.
(அல்குர்ஆன் 13:11)
அர்ஷைச் சுமப்பவர்கள்
—————————————-
வானவர்கள் அதன் ஓரங்களில் இருப்பார்கள். அந்நாளில் (முஹம்மதே!) உமது இறைவனின் அர்ஷை தம் மீது எட்டுப் பேர் (வானவர்கள்) சுமப்பார்கள்.
(அல்குர்ஆன் 69:17)
நரகக் காவலாளிகள்
—————————————-
அதன் மேல் பத்தொன்பது (வானவர்கள்) உள்ளனர். நரகத்தின் காவலர்களை வானவர்களாகவே தவிர நாம் ஆக்கவில்லை. அவர்களின் எண்ணிக்கையை (நம்மை) மறுப்போ ருக்குச் சோதனையாகவே தவிர நாம் ஆக்க வில்லை.
(அல்குர்ஆன் 74:30,31)
கருவறையில் விதியை எழுதுதல் தாயின் வயிற்றிலுள்ள கரு, நான்கு மாதங்களை அடைந்ததும் அல்லாஹ் ஒரு மலக்கை அனுப்பி அவனுடைய வாழ்வாதாரங்கள், ஆயுள், செயல்கள் ஆகியவை எவ்வளவு என்றும் அதன் முடிவு எவ்வாறு அமையும் என்பதையும் எழுதுமாறு கட்டளையிடுவான்.
நூல் : புகாரீ 7454
கப்ரில் விசாரணை செய்தல்
—————————————-
கப்ரில் மய்யித் வைக்கப்பட்டதும் இரு மலக்குகள் அதனிடம் வந்து அல்லாஹ்வைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியும், நபி யார் என்பதாகவும் கேள்விகளைக் கேட்பார்கள்.
நூல் : திர்மிதீ 991
ஏகத்துவம்