வஸ்வாஸ்- وَسْوَسَ ஷைத்தானின் ஊசலாட்டங்கள்
‘வஸ்வாஸ்‘ எனும் மனக்குழப்பம்
மக்கள் தொழுகைக்காக உளு செய்யும் போதும், தொழும் போதும் ‘வஸ்வாஸ்‘ எனும் மனக்குழப்பத்திற்கு பெரும்பாலும் ஆளாகின்றனர்.
சிறுநீர் கழித்துவிட்டு அது எங்கே ஆடை யில் பட்டுவிட்டதோ என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இவ்வாறு ஏற்படும் மனக்குழப்பத் திற்கு ‘வஸ்வாஸ்‘ என்று பெயர். சிலர் தொழும் போது ‘அல்லாஹு அக்பர்’ என்று ஆரம்ப தக்பீர் சொல்லும் போது நிய்யத் செய்ய(?) வேண்டும் என்பதற்காக தக்பீரை திரும்பச் திரும்பச் சொல்லி மனக்குழப்பத்திற்கு ஆளாவர். நாம் கொண்டிருக்கிற ஈமானிலும் மனக்குழப்பம் ஏற்படும் என ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றன.
ஈமானில் மனக்குழப்பம் நபி(ஸல்) அவர்களுடைய தோழர்களுள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ”எங்கள் உள்ளத்தில் சில (குழப்ப மான) விஷயங்கள் எழுகின்றன. அவற்றை (வெளிப்படுத்திப்) பேசு வதைக்கூட நாங்கள் மிகப் பெரும் (பாவ) காரியமாகக் கருதுகிறோம். (இது பற்றி தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?)” என்று கேட்டனர்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள், ”உண்மையிலேயே நீங்கள் அத்தகைய உணர்வுகளுக்கு உள்ளாகின்றீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள், ‘ஆம்‘ என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ”அதுதான் ஒளிவுமறைவற்ற இறைநம்பிக்கை” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி); நூல் : முஸ்லிம் 209
உங்களுள் ஒருவரிடம் (அவர் மனத்திற்குள்) ஷைத்தான் வந்து, ”இதைப் படைத்தவர் யார்? இதைப் படைத்தவர் யார்?” என்று கேட்டுக் கொண்டே வந்து, இறுதியில், ”உன் இறைவனைப் படைத்தவர் யார்?’‘ என்று கேட்கின்றான். இந்தக் (கேள்வி கேட்கும்) கட்டத்தை அவர் அடையும் போது அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும், (இத்தகைய சிந்தனையிலிருந்து) விலகிக் கொள்ளட்டும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி); நூல் : புகாரி 3276
‘உளூ’வில் மனக்குழப்பம் அப்பாத் பின் தமீம்(ரஹ்) அவர்கள் தம் தந்தையின் சகோதரர் (அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம்(ரலி) இடமிருந்து கூறியதாவது:
நபி(ஸல்) அவர்களிடம் ஒருவருக்குத் தொழும் போது வாயு பிரிவதைப் போன்ற உணர்வு ஏற்படுவதாக முறையிடப் பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், ”(வாயு பிரிந்ததன்) சப்தத்தைக் கேட்காத வரை, அல்லது நாற்றத்தை உணராத வரை அவர் (தொழுகையிலிருந்து திரும்ப வேண்டியதில்லை” என்று கூறினார்கள்.
நூல்கள் : புகாரி 137, முஸ்லிம் 589
தொழுகையில் மனக்குழப்பம் நபி(ஸல்) அவர்கள் கூறியதாவது: தொழுகைக்காக அறிவிப்புச் செய்யப் பட்டால், ஷைத்தான் தொழுகை அறிவிப்பைக் கேட்காமலிருப்பதற் காக வாயு வெளியேறிய வண்ணம் (வெகு தூரத்திற்கு) பின்வாங்கி ஓடுகிறான்.
தொழுகை அறிவிப்பு முடிந்த தும் மீண்டும் (பள்ளிவாசலுக்கு) வரு கிறான். பின்னர் ‘இகாமத்‘ சொல்லப் பட்டால் பின்வாங்கி ஓடுகிறான். ‘இகாமத்‘ சொல்லி முடிக்கப்பட்ட தும், (திரும்பவும் பள்ளிவாசலுக்கு) வந்து, (தொழுது கொண்டிருக்கும்) மனிதரின் உள்ளத்தில் ஊசலாட்டத் தைப் போடுகிறான்.
அவரிடம் ‘இன்ன இன்னதை நினை’ என்று தொழு கைக்கு முன்பு அவரது நினைவில் வராத வற்றை யெல்லாம (தொழுகை யில் நினைத்துப் பார்க்கும்படி) கூறுகிறான். இறுதியில், அந்த மனிதருக்குத் தாம் எத்தனைன ரக்அத்கள் தொழுதோம் என்பதே கூடத் தெரியாமல் போய் விடும் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் 636
எனவே இத்தகு மனக்குழப்பத் திற்கு ஆளாவோர் அதை விட்டு விட்டு ஷைத்தானை விட்டும் பாதுகாப்புத் தேடி இறைவணக்கத்தில் ஈடுபட வேண்டும். மன ஓர்மையுடன் வழி பாடுகளில் ஈடுபட்டு மனக்குழப்பத்தைக் கைவிட வேண்டும்.