லுகர் மற்றும் அஸர் தொழுகையில் இமாமை பின் பற்றும்போது நாமும் மனதினுல் ஓத வேண்டுமா?
லுஹர் மற்றும் அஸர் தொழுகைகளில் இமாம் மனதிற்குள் ஓதும் போது பின்பற்றி தொழுபவர்கள், மனதிற்குள் சூரா அல்-ஃபாத்திஹாவை ஓத வேண்டும் என்பது தான் சரியான நிலைப்பாடாகும்.
*சூரா அல்-ஃபாத்திஹாவை ஓதாதவருக்கு தொழுகை இல்லை.*
(ஆதாரம்: புகாரி 756, முஸ்லிம் 394)
இந்த ஹதீஸ், இமாம், மஃமூம் (பின்பற்றுபவர்), தனித்துத் தொழுபவர் என அனைவருக்கும் பொதுவானதாகும்.
சூரா அல்-ஃபாத்திஹா ஓதுவது தொழுகையின் மிக முக்கிய கடமைகளில் ஒன்றாகும்.
இமாம் சப்தமில்லாமல் ஓதுவதால், நாம் மனதிற்குள் ஓதுவது *குர்ஆன் ஓதப்பட்டால் செவிதாழ்த்திக் கேளுங்கள்* (7:204) என்ற வசனத்திற்கு முரணாக அமையாது.
அதே நேரத்தில், *ஃபாத்திஹா ஓதாமல் தொழுகை இல்லை* என்ற நபிமொழியையும் நாம் செயல்படுத்தியவர்களாக ஆகிறோம்.
*الله اعلم*