\\*ருகூவில் ஓதும் துஆக்கள்‎*\\

ருகூவில் ஓதும் துஆ – 1

“*சுப்ஹான ரப்பியல் அழீம்*‘

பொருள்: *மகத்துவமிக்க என் இறைவன் தூயவன்*

அறிவிப்பவர்: ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி); நூல்: முஸ்லிம் (1421)

ருகூவில் ஓதும் துஆ – 2

*சுப்ஹானக்கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக்க, அல்லாஹும்ம ஃக்ஃபிர்லீ*

பொருள்: *இறைவா! எம் அதிபதியே! நீ தூயவன்; உன்னைப் போற்றுகின்றோம்; இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக*!

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்: புகாரி (794)

ருகூவில் ஓதும் துஆ – 3

“*சுப்பூஹுன் குத்தூசுன், ரப்புல் மலாயிகத்தி வர்ரூஹ்‘*

பொருள்: *இறைவா! நீ தூயவன். மிகப் பரிசுத்தமானவன். வானவர்கள் மற்றும் ரூஹின் அதிபதி.*

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்: முஸ்லிம் (840)

ருகூவில் ஓதும் துஆ – 4

“*அல்லாஹும்ம, லக ரகஃத்து, வ பிக ஆமன்து, வ லக அஸ்லம்து. ஹஷஅ லக சம்ஈ வ பஸரீ வ முஹ்ஹீ வ அழ்மீ வ அஸபீ”*

பொருள்: *இறைவா, உனக்காகக் குனிந்தேன். உன் மீதே நம்பிக்கை கொண்டேன். உனக்கே கட்டுப் பட்டேன். உனக்கே என் செவியும் பார்வையும் மூளையும் எலும்பும் நரம்பும் பணிந்தன*

அறிவிப்பவர்: அலீ பின் அபீதாலிப் (ரலி); நூல்: முஸ்லிம் (1419)

ருகூவில் ஓதும் துஆ – 5

*சுப்ஹான தில்ஜபரூத்தி, வல்மலகூத்தி, வல்கிப்ரியாயி வல் அள்ம(த்)தி*

பொருள்: *அடக்கி ஆள்தலும், அதிகாரமும், பெருமையும், மகத்துவமும் மிக்க அல்லாஹ் பரிசுத்தமானவன்*

அறிவிப்பவர்: அவ்ஃப் பின் மாலிக் (ரலி); நூற்கள்: நஸாயீ (1049), அபூதாவூத் (873), அஹ்மத் (24026)

ருகூவில் ஓதும் துஆ – 6

“*சுப்ஹானக்க வபி ஹம்திக்க லாயிலாஹ இல்லா அன்த்த*‘

பொருள்: *இறைவா! உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன். உன்னைத் தவிர வேறு இறைவனில்லை.*

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்: முஸ்லிம் (838)

 

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *