ருகூவிலிருந்து எழும் போது ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா
(புகழ்பவரின் புகழ் வார்த்தைகளை அல்லாஹ் கேட்கிறான்)
سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ
رَبَّنَا لَكَ الحَمْدُ
ருகூவிலிருந்து முதுகை நிமிர்த்தும் போது ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறுவார்கள். பின்பு நிலைக்கு வந்து ரப்பனா லக்கல் ஹம்து என்பார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரீ 789
ரப்பனா ல(க்)கல் ஹம்து (புகாரி-789)
ரப்பனா வல(க்)கல் ஹம்துநல (புகாரி-732)
அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து (புகாரி-796)
அல்லாஹும்ம ரப்பனா வல(க்)கல் ஹம்து
(பொருள்: எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும்!)
நூல்: புகாரி-7346
ரப்பனா ல(க்)கல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபார(க்)கன் ஃபீஹீ (இறைவா! தூய்மையான அருள் நிறைந்த ஏராளமான புகழ் அனைத்தும் உனக்கே உரியது!)
நூல்: புகாரி-799