20:40, 26:14, 28:15, 28:16, 28:19 ஆகிய வசனங்களில் மூஸா நபியவர்கள் ஒருவரைத் தவறுதலாகக் கொலை செய்த நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. இது நடக்கும்போது அவர்கள் இறைத்தூதராக இருக்கவில்லை. மேலும் கொலை செய்யும் நோக்கத்தில் அவர்கள் தாக்கவும் இல்லை என்பது இவ்வசனங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
இதில் மற்றொரு செய்தியும் உள்ளது.
மூஸா நபியின் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கும், எதிரி இனத்தைச் சேர்ந்தவருக்கும் இடையில் நடந்த சண்டையில் தனது இனத்தவருக்காக எதிரி இனத்தைச் சேர்ந்தவரை மூஸா நபி கொலை செய்து விடுகிறார்கள். இதற்காக அவர்கள் மன்னிப்புக் கேட்டதாகவும் இறைவன் அவரை மன்னித்து விட்டதாகவும் 28:16 வசனம் கூறுகிறது.
இன வெறி அடிப்படையில் தனி நபர்களோ, குழுக்களோ யாரையும் கொலை செய்வது பாவமான காரியம் என்பதும் இதிலிருந்து தெரிய வருகின்றது.
அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.
[அல்குர்ஆன் 112:1]