மூன்று நேரங்களில் தொழக்கூடாது என்ற தடை ஹரம் ஷரீஃபிற்குமா?
தொழுவதற்கு தடை செய்யப்பட்ட 3 நேரங்களில் தொழக்கூடாது என்ற தடை ஹரம் ஷரீஃபில் தொழுவதற்கு இல்லை என்பது சரியா? மஸ்ஜிதுந் நபவியில் தொழுவதற்கும் அந்த விதிவிலக்கு உண்டா?
அப்து மனாஃபின் சந்ததியினரே! இந்த ஆலயத்தில் தவாஃப் செய்யும் எவரையும் தடுக்காதீர்கள். இரவு பகல் எந்த நேரமும் தொழக் கூடிய எவரையும் தடுக்காதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி); நூற்கள்: திர்மிதி 795, அபூதாவூத் 1618, நஸயீ 2875
தொழுவதற்குத் தடை செய்யப்பட்ட நேரங்களிலிருந்து மஸ்ஜிதுல் ஹராமுக்கு மட்டும் இந்த ஹதீஸ் விதிவிலக்கு அளிக்கின்றது. அங்கு எந்த நேரத்திலும் தொழுவதற்கு அனுமதியுள்ளது. இந்த விதிவிலக்கு மஸ்ஜிதுந்நபவீக்குப் பொருந்தாது